Thursday, January 6, 2011

சேவை மனப்பான்மையற்ற போக்குவரத்துத்துறை

நாம் அன்றாடம் செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சிச் செய்திகளிலும் பார்க்கிறோம், கேட்கிறோம்  அரசுப்பேருந்துகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில்  பல விபத்துக்கள் தொடர்ச்சியாக நடை பெறுகின்றன. அதற்க்குக்  காரணம் ஓட்டுனரின் கவனக்குறைவு மற்றும் பழுதடைந்த பேருந்துகள் இயக்கப்படுவதால்,சாலைகள் பழுதடைந்ததால்   என்று துறையைசார்ந்தவர்கள்  கூறுகின்றனர், இதற்க்கு முடிவு எங்கே ! இதற்க்கு அரசு பொறுப்பும்  அரசு ஏற்க்க  வேண்டும்  ?
 
இது ஒருபுறமிருக்க மாநில போக்குவரத்துறை இன்னும் மோசமாக உள்ளது. எல்லா பஸ்களும் சுகாதாரமற்ற நிலையில்  இயக்கப்படுகிறது. கால் வைக்கும் இடமெல்லாம் குப்பையும் கூளமுமாக உள்ளது மேலும் மழைக்காலங்களில் சேற்றில் கால் வைப்பதுபோல் உள்ளது தவிர மேலிருந்து தண்ணீர் ஒழுக்கு. 

மழைக்காலங்களில் மழைச்சாரல் உள்ளே அடிக்கிறது மேலிருந்து தண்ணீர் ஒழுகுகிறது. ஒரு ஜன்னல் கதவுகூட  திறந்தால்  மூடுவதில்லை மூடினால் திறப்பதில்லை. வருடத்திற்கு ஒருமுறையாவது சுத்தம் செய்தால் பரவாயில்லை.

மாநகரப்பேருந்துகளில் இரவு நேரங்களில் நம்பர் ப்ளேட்டில் எரியும் விளக்கு என்னை இல்லாத அகல் விளக்குபோல் வெளிச்சமற்று மங்கலாக தெரிகிறது பார்வை சரியாக உள்ளவர்களும் படிக்க முடியாது.  பஸ் நெம்பர் மற்றும் எங்கு செல்கின்றது எதுவும்  தெளிவாக தெரிவதில்லை! சில பஸ்களில் போர்டு தலைகீழாக உள்ளது அதுமட்டுமல்லாமல்  முக்கால் வாசி பஸ்ஸில்பக்கவாட்டில் நம்பர்   ப்ளேட் கிடையாது அவசரமாக பஸ் கிளம்பும் தருவாயில் ஓடி வந்து ஏறிக்கொள்ளலாம் என்றால் பக்க வாட்டில் நம்பர் இல்லை.

மேலும் பஸ்கள் புறப்படும் நேரம் சரியாக கடை படிக்கப்படுவதில்லை. சில நேரங்களில் ஒரே வழி  மார்க்கப் பஸ்கள் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக
வருகிறது சில நேரத்தில் பல மணி நேரமாக எந்த பஸ்சும் வருவதில்லை.
 
அதிக மக்கள் பயன்பாட்டில் உள்ள சைதாபேட்டை  மற்றும் குரோம்பேட்டை
போன்ற இடங்களில் டைம் கீப்பர் இருப்பதில்லை அப்படி இருக்கும் இடத்தில இரவு 9 .00 மணிக்குமேல் யாரும் இருப்பதில்லை. சில நேரங்களில் ஒருவித அறிவிப்புமின்றி  ஓட்டுனரும்  நடத்துனரும் பஸ்ஸை ஓரமாக நிறுத்திவிட்டு டூட்டி முடிந்து விட்டதென்று  போய்க்கொண்டே இருக்கிறார்கள் .

இந்த்க்குறையை பொருப்பற்ற  செயலை  களைய டைம் கீப்பர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் சேவை மனப்பான்மையோடு செயல்படவேண்டும்! அரசு ஆவன செய்யவேண்டும்.

 
இதுவே அனைத்து பயணிகளின் கோரிக்கையாகும். 

சுந்தரராஜன்
 

3 comments:

  1. நல்ல வர்ணனை....நிதர்சன உண்மைகளை எழுதும் துணிச்சல் தொடரட்டும்!!! எழுத்து பிழைகள் நீக்கி தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்!!!!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. my greetings to you, dear Mr.Sunderrajan

    Have watched you perform wonderfully on stage as Allaudin Bhootham and Paatti in Crazy Creation plays. This blog shows the other creative side of you. pl double check for typos.

    ReplyDelete