என்றும் இளமை,இனிமை எப்படி
எந்த வயதினரும் உடலால் மனத்தால் இளமையாக இருக்க முடியும். அதற்க்கு லேகியம் சூரணம் சாப்பிட வேண்டாம்.
அதற்க்கான வழி முறைகள்:
அதற்க்கான வழி முறைகள்:
- முதலில் எதற்கும் டென்ஷன் ஆவதை தவிர்க்க வேண்டும்.
- அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட வேலையோ அல்லது குறிப்பிட்ட நேரத்தில் கட்டாயம் முடிக்க வேண்டிய வேலையோ தவிர மருத்துவம் சம்பத்தப்பட்ட வேலையோ தாமதிக்க கூடாது!
- மற்றபடி இன்று நினைத்த காரியம் இன்றே இப்பொழுது நடக்க வில்லையே என்று நினைப்பது, இதை வாங்க முடியவில்லையே, அதை வாங்க முடியவில்லையே என்று நினைப்பதை தவிர்த்தல்!
- தெளிவாக நேரான பாதையில் நாம் செல்லும்போது மற்றவர் அறிவுரையோ குருக்கீடலையோ பொருட்படுத்தாமல் இருத்தல்!
- யாரிடமும் அதிகமாக பேசாதிருத்தல்! சம்பந்தமில்லாதவர்களிடம்
தானே அறிமுகம் செய்துகொள்வது சம்பந்தமில்லாத விஷயங்கள்
பேசுவது தவிர்க்கப்படவேண்டியது. - தேவையற்ற இடத்தில நம்மைபற்றி பெருமை பேசுவது, அடுத்தவரை குறை கூறுவது இவற்றை தவிர்க்க வேண்டும்.
- அதிக சிந்தனையும் கற்பனையும் தவிர்க்க வேண்டும்.
- தேவைக்கு அதிகமான உணவு உண்ணாதிருத்தல் ஆனால் கண்டிப்பாக நேரத்தில் தேவையான உணவு உண்ணுதல் .
- நம்மை நேரில் புகழ்வது பின்னால் இகழ்வது இரண்டையும்பொருட்படுத்தாமல் இருத்தல்.
- வஞ்சனையற்ற உடல் உழைப்பு.
- பிறர் மனம், உடல் நோக காரணமாக நாம் இல்லாதிருத்தல்.
- நமக்கு வாழ்வில் கிடைத்த செல்வங்கள்,புகழ்ச்சி இகழ்ச்சி அனைத்தும் இறைவனுக்கே அர்ப்பணம் என்ற தெளிவு.
இவை யாவும் கடை பிடித்தால் மட்டுமே நாம் என்றும் இளைமையாக இருப்பது நிச்சயம் முயற்சி திருவினையாக்கும்!
ஆரோக்கிய ஆர்வலன்
சுந்தரராஜன்
அனைத்தும் உண்மை. உண்மை கசந்தாலும்
ReplyDeleteஅதுவே நல் மருந்து அல்லவா? மருந்து
கசக்கத்தானே செய்யும்.
வந்தனைக்குரிய சிந்தனை....யோக்யமாய் இருந்தால்
ReplyDeleteஆரோக்யமாய் இருக்கலாம்....ஆரோக்யத்திலேயே
யோக்யம் உள்ளது....தொடரட்டும் உன் பிணி தீர்க்கும்
பணி....க்ரேசி மோகன்....
உங்களை நன்றாக அறிந்தவன் என்ற உரிமையோடு சொல்கிறேன்....இது உங்கள் வாழ்கை பாடம் அன்று...இதன் படி வாழ்ந்து கொண்டு இருக்கின்ற உங்கள் வாழ்க்கையே எங்களுக்கோர் பாடம் !!!
ReplyDeleteGood thoughts, dear Sundax.
ReplyDeletePlease enable comment moderation, Sundax. You can pick and choose the comments you receive. Though all the comments above are from our dear friends, the net sometimes is like a quagmire...
ReplyDeleteஇதெல்லாம் கொஞ்சம் கடினமான காரியம். இதெல்லாம் விட எளிதானது "சாக்லேட் கிருஷ்ணா" நாடகம் பாருங்க....அதில துள்ளி திருடும் பாட்டியை பாருங்க, நல்லா வாய் விட்டு சிரிங்க நோய் விட்டு போகும்...நீங்க அந்த பாட்டி மாதிரி இளமையாய் இருக்கலாம் இனிமையோடும் இருக்கலாம்...
ReplyDelete