Monday, June 30, 2014

Kantu, this Face - Book can think of .... Crazy Mohan
The trio was in almost 35 years .... Crazy tampatyam no written reason for the success of the group that featured the burning camphor Balaji's natippo swallow does not make a promise .... Father Ramesh, known cuntaks cuntararajan, the Parthiban Parthi visvacame of the group .... more ARS, Sathiyamoorthy, makeup Natarajan claims that 25 people .... This will be my substitute family .... And I fell atsatai yellow tinged மங்களமாக்கியவர்கள் tanimaram toppakatu .... .... .... These are the Crazy tanimarattai தோப்பாக்கியவர்கள் our team who, we are pirammopatecam and friendly - punalai put unity kayattiriyai upatecippom .... The two of the three famous Mylapore Academy Award going to buy (cuntaks grandmother vetattirkum, Parthi chocolate Krishna Company's General - Manager to act as'' chocolate Krishna'' 700 Ramesh Raghavan Denali'' father'' vaittarku close to the show .... the drama of another group iyakkiyatarkum) .... Balaji featured silk shawl wrap kelaravittom advice ....
I am about to share with the three previously written venpakkalai .... I hope someone will agree that these kamban home silk weaving ....
SUNDAX பாட்டி வேஷம் பற்றி
------------------------------ ---------------- ---
பாட்டியின் வேடத்தைப், பாங்குற செய்தவன்,
போட்டியிட்டான் மாதுபா லாஜியுடன் - கூட்டுவான்,
எந்தரோல் தந்தாலும் ஏற்றம் அளிப்பது,
சுந்தர ராஜன் சிறப்பு ....
Father of Ramesh
------------------------------ ---
muppatam year mulumuccay drama,
never fails Chief Ruler, - father,
ramesauntan, riti of Regula,
imejuk (Queen) evareste offset ....
Parthi to a friend   Enaccolla, namkatanai flows, which yutanmuti treatment, nanpanavan, - the fame, Kandeepan, the word is kavuravan, cotara, see the Pandava Arjuna .... Crazy Mohan ..




Monday, June 16, 2014

S.S.சுந்தரராஜன் -மேடை/டிவி/சினிமா -நடிகர்

எனது கலைத்தொண்டு:  1976 இலிருந்து தொடங்கியது  முதலில் All India Radio Auditioned Artiste:  திரு கூத்தபிரான் ,MK மூர்த்தி, புனிதவதி இளங்கோவன்,  ஐயப்பன் T கணேசன், சாந்தி தணிகாசலம் (Commercial) T.தாண்டவராயன் (வயலும் வாழ்வும்) போன்றோர் காலத்திலிருந்து, அங்கு Drama, Commercial, Form and Home போன்ற அனைத்து Section னிலும் நடிப்பு, தொகுப்பு, வர்ணனை, போன்ற எல்லா பணிகளையும் செய்துள்ளேன்.

சபா அனுபவம்  கபாலி பைன் ஆர்ட்ஸ் என்ற சபாவில் 15 ஆண்டுகள் கமிட்டி மெம்பர் ஆக இருந்ததில் அனைத்து நாடகக் குழுவினர்களோடும், மற்றும் கச்சேரி வித்வான்கள் மற்றும் நாட்டிய நடன கலைஞர்கள் போன்ற பலரது  நெருங்கிய நட்பும் பரிச்சியமும் உண்டு.  மேலும் சாபாவின் பல்சுவை  கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ப்பேன்..

மேடை நாடகம்: முதலில்குடந்தை மாலியின் நாடக மித்ரா குழுவில்
1) ஒரு மனைவி உருவாகிறாள்-100 முறை 2)வேஷங்கள்-75 முறை 3)கோபுரம் தாங்கும் பொம்மைகள்-50 முறை நடித்துள்ளேன். . 

ஒரு மனைவி உருவாகிறாள் 100ஆவது நடகத்திற்கு Dir. திரு S.P முத்துராமன் அவர்கள் வந்து நாடகத்தையும் எனது கதா பாத்திரத்தையும் வெகுவாக பாராட்டினார்.

கிரேசி குழுவில்  1982 முதல் கிரேசி மோகன் குழுவில் இன்றுவரை பல விதமான பாத்திரங்கள் ஏற்று நடித்துக்கொண்டு இருக்கிறேன். பல பாராட்டுகளும் கிடைத்துக்கொன்டிருக்கின்றன.

குறிப்பாக எனக்கு மேடை நாடகங்களில் சிறந்த பெயர் வாங்கிக்கொடுத்த பாத்திரங்கள்:1) மீண்டும் க்ரேசி தீவ்ஸ்- அப்பன்ணா சாஸ்த்ரிகள், 2) ஒரு பேபியின் டைரி குறிப்பு - மாதுவின் மச்சினன் உப்பிலி 3) கிரேசி கிஷ்கிந்தா ஆராவமுதன் (மாதுவின் அப்பா) 4) அலாவுதீன் 100 வாட்ஸ் பல்ப் =வேணு மற்றும் நரசிமாச்சாரி 5)மாது +2- காது கேக்காத சாஸ்த்ரிகள் 6) சாட்லைட் சாமியார் கான்ஸ்டபிள் நாய்டு 7) 36 பீரங்கி லேன்-வரதன்  8) மீசை ஆனாலும் மனைவி -சீனு  மற்றும் குஷ்மா தேவி (ஆண் /பெண் வேடம்-ஸ்திரி பார்ட்)

எல்லாவற்றையும் விட மிகுந்த பேரும் புகழும் வாங்கிக் கொடுத்த அனைவராலும் பாரட்டபெற்ற  தற்போது மேடை அரங்குகளை சிரிப்போலியில் அதிர  வைத்துகொண்டிருகின்ற எங்கள் "" சாக்லேட் கிருஷ்ணா"" நாடகத்தில் பாட்டி கதா பாத்திரம்.மேலும் கூகுல் கட்ோத்கஜன் நாடகத்தில் பாட்டியாகவும் சின்ன பொண்ணு கவ்சியாகவும் நடித்துள்ளேன்:பல விருதுகள் கிடைத்த்தது::

மேலும் சில Substitute ரோல்களையும் சிறப்பாகச் செய்துள்ளேன்
மேடை நாடகம் மட்டும் 65000முறை நடித்துள்ளேன்.
நடித்த பகுதிகள் வெளி நாடுகள்: அமெரிக்கா முழுவதிலும் 4 முறை ஆசியா  சிங்கப்பூர் ,ஸ்ரீலங்கா, ஜகார்த்தா(Indonesia),பாங்காக், ஹாங்காங், துபாய் ,மஸ்கட், குவைத், அபுதாபி சீஷெல் போன்ற நாடுகளுக்கு பல முறை சென்றுள்ளோம்....மற்றும்  பம்பாய், டெல்லி,கல்கத்தா ஹைதராபாத், கொச்சின்,திருவனந்தபுரம் பெங்களூர் , கோவை,மதுரை,திருச்சி என இந்தியாவில் நடித்துள்ளேன்....
மேலும் சில நாடுகளிலிருந்து அழைப்பு வந்த வண்ணம் உள்ளது. 
அடுத்த ஆண்டு அந்த நாடுகளுக்கு செல்வோம்.. ,        . 

டிவி சீரியல்கள்:எங்கள்  ’’கிரேசி கிரியேஷன்ஸ்’’குழுவின் எல்லா TV சீரிலிலும் முக்கிய வேடமேற்று நடித்துள்ளேன்..கிட்டத்தெட்ட 300 வாரங்கள் நடித்துள்ளேன்.

மற்றவை:  ஜெயஸ்ரீ பிக்சர்ஸ் S.V ரமணனின்  பெரும்பாலும்  எல்லா தொடரிலும் நடித்துள்ளேன் அதில் திரு YG மகேந்திரன் வெண்ணிற ஆடை மூர்த்தி, சச்சு ஆகியோரோடு  நடித்துள்ளேன்.

இப்போது புது யுகம் சேனலில் திரு சுரேஷ் கிருஷ்ணாவின் ""உணர்வுகள்"" 
சீரியலில் திரு டெல்லி கணேஷ் அவர்களோடு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளேன். மேலும் இப்போது "அரங்கேற்றம்" தொடரிலும் நடித்துக்கொண்டிருக்கிறேன்.  

பத்து மணிக் கதைகள் தொலைத் தொடர் .
தவிர பொதிகை தொலைக் காட்சியில் ரதீஷ் இயக்கத்தில்  "வாழ்வே தாயம் என்ற தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.   .          . .   

இது தவிர கவிதைகளும் கட்டுரைகளும் எழுதுவேன்.

நான் நடித்த சில திரைப்படங்கள் 1) கமலின் மைக்கேல் மதன காமராஜன், ஷங்கரின் ""ஐ"" ,முக்தா பிலிம்ஸ் கதா நாயகன் , காவல் கீதம், தம்பி பொண்டாட்டி போன்ற படங்களில் சிற்சிறு வேடங்களில் நடித்துள்ளேன். 

"சமன்பாடு" என்ற Telefilm ல் நடித்துக்கொண்டிருக்கிரேன். 

மேலும் சில விளம்பரங்களில் நடித்துள்ளேன். 

எனது கலை ஆர்வத்தை ஊக்குவித்து என்னை ஒரு சிறந்த நடிகனாக்கிய திரு கிரேசி மோகன் SB காந்தன் திரு குடந்தை மாலி அவர்களுக்கும் மற்றும் சக நடிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெறிவித்துக்கொள்கிறேன்.

என்றும்  கலைப்பணி தொடர விரும்பும் 
அன்பன் சுந்தரராஜன் .
கைபேசி :9003095640   

Saturday, May 31, 2014

மோடியின் நேர்மையான அணுகுமுறையைப்  
பார்த்து மற்ற கட்சிகள் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும் 

அவரின் பதவி ஏற்ப்பு விழாவிற்கு சார்க் நாடுகளையும் மற்றும் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் இலங்கை போன்ற நாடுகளின்  அதிபர்களை அழைத்தது . அனைத்து உலக நாடுகளும் பிரமுகர்களும்  பிரமிக்க வைத்தது.

இதன் முலம் ஒரே கல்லில் 2 மாங்காய் என்பது போல பாகிஸ்தான் மற்றும் இலங்கை சிறையில் அடைக்கபட்டிருந்த தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வைத்தார்.மீனர்வகளுக்காக போலி கோஷம் போடும் கூட்டத்தை வாயடைக்க வைத்தார்.நீண்டகால பிரச்னைக்கு  ஒரு அழைப்பின் மூலம் முடிவு கட்டினார்.   .

இவரது தொடக்கமே ஒரு சாதனையி தொடங்கியது. இவரது ராஜ தந்திரத்தை அனைவருக்கும் புரிய வைத்தார். 
  
பொதுவாக எல்லா அரசியல் கட்சிகளும் தேசிய கட்சியாக இருந்தாலும் மாநில கட்சியாக இருந்தாலும்  தான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தவுடன் நாட்டின் முன்னேற்றதிற்கான மற்றும் வளர்ச்சிக்கான பணிகளை தொடங்காமல். முந்தைய ஆட்சியாளர்களிடம்  பகைமையை மனதில் கொண்டு  ஒவ்வொரு அ மைச்சர்களையும் ஏதாவது பழி சுமத்தி அவர்களை சிறையில் அடைப்பது, ஊழல் வழக்குகளில் ரெய்டு என்ற பெயரில்  உள்ளே தள்ளுவது,. அவர்கள் கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் பெயர் மாற்றுவது  அல்லது அதை முடக்குவது போன்ற செயல்பாடுகளை மாநில மற்றும் மதிய அரசுகள் முதல் வேலையாக தொடங்கும்.

இன்று (31/05/2014) தினமலர் பத்திரிகையில்  மோடியின் வளர்ச்சிப் பணிகள் பற்றி படித்ததும் அவரின் நடவடிக்கைகள் போற்றத்தக்கது என்பதை உணர முடிந்தது 

அதாவது  முந்தய ஆட்சி  கொண்டு வந்த எந்த திட்டத்தையும் அவர் பெயர் மாற்றவில்லை எதையும் முடக்கவும் இல்லை.மேலும் முக்கியமாக ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் 100 நாள் செய்யல்  திட்டம் உருவாக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்தது இன்னும் பல..

மோடியின் அரசு இந்தியாவை அதி சீக்கிரத்தில் ஒரு வல்லரசாக மாற்றும் என்பதில் ஐயமில்லை.

மோடியின் அரசுக்கு ஒரு "ஜே" போடுவோம்.  

பொறுத்திருந்து பாப்போம்.

தேசிய பற்றுள்ள இந்திய பிரஜை 
சுந்தரராஜன்   .
 

Tuesday, April 15, 2014


குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் 
சென்னை மாநகரம் 

இந்த  துறை சார்ந்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:

நங்கநல்லூரில் TNGO Colony முதல் தெருவில் கிட்டத ட்ட  30-40 வீடுகள் உள்ளன.
கடந்த   15-20 நாட்களாக தெருவின் தொடக்கம் முதல் கடைசி வரை  மழை நீர் கால்வாய் தோண்டப்பட்டு வருகிறது. வீட்டு நுழை வாயிலை ஒட்டியவாறு 3 அடி நீளம் 4 அடி ஆழம் தோண்டி உள்ளது . நாங்கள் வெளியே செல்லவும் வாகனங்களை எடுக்கவும் பாதுகாப்பாக எந்த ஏற்பாடும் செய்யவில்லை. ஒரு மாதிரி நாங்களே எகிறி குத்திச்சு ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு சமாளித்து வருகிறோம். தெருவாசிகள் அனைவரும் இந்த பணிபுரிபவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பும் உதவியும் செய்து வருகிறோம்.
அனால் பள்ளிக்குச்செல்லும் குழந்தைகள் அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் மற்றும் முதியவர்கள் அனைவரும் வெளியே வர சங்கடப்படுகின்றனர்.  .

மேலும் குடி நீர் இணைப்பு மற்றும் கழிவு நீர் இணைப்புகள் உடைக்கப்பட்டு அவைகளை சரியாக தரமாக மூடாமல் மன்னைத்தூவி சிமென்ட் பலகையால்  மூடி விடுகின்றனர்.
கடந்த 15 நாட்களாக சரி வர குடிநீர் வருவதில்லை. கேட்டால் அவர்களிடமிருந்து சரியான முறையான பதில் இல்லை.

குடிநீர் வாரியமும் பள்ளம் தொண்டியுள்ளதால் லாரி வருவதில்லை ரோடுக்குச்சென்றும் தண்ணீர் கிடைக்க வழி இல்லை. பூமி தண்ணீரும் 
தேவையான அளவிற்கு கிடைப்பதில்லை.  

எங்கள் தண்ணீர் இணைப்புகள் சரியாக இணைக்கப்பட்டு குடிநீர்  சீராக வரவேண்டும் சாலையை சீர்படுத்தி சுலபமாக நடமாட வழி செய்ய  வேண்டும். 

இதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறையை அணுகி  துரிதபடுத்தும்
பணியை  தினமலர் பத்திரிகை மூலம் செயல் படுத்த முடியும் என நம்புகிறோம் .

அன்புடன் 
சுந்தரராஜன் 
நங்கநல்லூர் TNGO Colony பகுதிவாசி       
No.19,Ist Street, Nanganallur
சென்னை 


சிறு தொழில் வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வரவேற்க்கத்தக்கது  
வெள்ளைக்காரன் நாட்டை விட்டுச்சென்றானே தவிர அவனது கலாச்சாரம் நாட்டில் இன்னும்  குறையவில்லை அதிகமாக உள்ளது .கிராமம் முதல் நகரம்வரை மக்கள் மேலை நாட்டு நகரீகத்த்தியே மிகவும் விருபுகின்ற்னர். இவ்வளவு ஏன் ஆடைகள் முதல் அடுப்பு ஏரிக்கும் பொருள்கள்வரை பெரும்பாலான் வீட்டில் மேலை நாட்டு பாணியில்தான் உள்ளது.   
அனைவரின் கவனத்திற்கும் : உங்கள் வீட்டில் எத்துனை வெளி நாட்டுப் பொருட்கள் உபயோகத்தில் உள்ளன எத்துனை பேர்கள் வெளி நாட்டில் பணியில் உள்ளனர்கள் இவற்றை முதலில் சரி செய்து கொள்ள வேண்டும்.. 

எதிற்ப்பு தெரிவிப்பவர்களுக்கு: சமீபத்தில்கூட ஒரு செய்தித்தாளில் பார்த்தோம் ஒரு அங்காடியில் கெட்டுப்போன, காலாவதியான் உணவுப்பண்டங்களை விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏன் இந்த அவலம்.::

இம்மாதிரியான ஊழல்கள் வால்மார்ட் போன்ற அன்னியர்களின் அங்காடிகளில் செய்வதில்லை.  பொருட்கள் கெட்டுபபோனாலோ காலாவதியானாலோ வெளியே எறிந்து விடுவார்கள் விற்ப்பனைக்கு வைக்கமாட்டார்கள்.
மேலும் தரமான பொருட்கள் மட்டுமே அங்கு விற்பனை செய்யப்படுகின்றன. எனவே அனைத்துத்தரப்பினரும்
இம்மாதிரியான கடைகளையே நாடுகின்றனர். மேலும் மக்கள் தரமான பொருட்களையே விரும்பி வாங்குகின்றனர்..

தரமற்ற பொருட்களை யாரும் வாங்குவதில்லை, பொருட்களின் விலை பார்த்தும் வாங்குவதில்லை. இந்த விதத்தில் யாரும் ஏழை எளியவர்களில்லை. மேலும் மக்களிடம் வாங்கும் திறன் அதிகரித்துள்ளது.
நம்ம ஊர்களில் காய்கறி அங்காடிகளில் மீதமான , அழுகிப்போன பதார்த்தங்கள் ஓட்டல்களுக்கு சப்பளை
செய்யப்படுகின்றன. மேலும் தள்ளுபடி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் அனைதுப்போருட்களும் செகண்ட்
சேல்ஸ், சகாய விலை என்ற நேர்மையற்ற ஊழல் முறைகள் ஏராளமாக உள்ளன. இதற்கு ஏழை எளிய
மக்களை பலியாகின்றனர். 

இப்படிப்பட்ட விற்ப்பனையாளர்களிடம் தரத்தை எப்படி எதிர்பார்க்கமுடியும்.இவர்கள் ஏன் அந்நிய முதலீட்டையும் அந்நியர்களின் அங்காடியையும் ஏதிற்க்கிறார்கள்? இவர்களால் ஒழுங்குமுறை 
விற்பனை செய்ய இயலாது, மேலும் தரத்தையும் உயர்த்தமாட்டார்கள். ஏன் இந்த விதண்டாவாதம். வியாபாரத்தில் போட்டி இருந்தால்தான் வியாபாரம் பெருகும் தரம் உயரும். பல அரசியல்வாதிகளும் பிரமுகர்களும் தொழிற்சாலைகள் தொடங்க அந்நிய நாட்டவர்களை பரிந்துரை செய்கின்றனர். 
இதனால்  இந்திய வர்த்தகம் பெருகும் பொருளாதாரம் உயரும் பலருக்கு வேலை வாய்ப்புக்கள் 
கிடைக்கும்.  சிறுதொழில் அந்நிய  முதலீடும் அப்படிதானே. நமது நாட்டில் உள்ள சிறு தொழில் வியாபாரிகள் தனது வியாபார முறையை ஒழுங்குபடுத்துவர், தரத்தை உயர்த்துவர் வியாபாரம் பெருகும் இதில் என்ன நஷ்டம் ஏற்படப்போகிறது .

எனவே சிறுதொழில் வியாபாரத்தில் அந்நிய முதலீடு வரவேற்க்கத்தக்கதே என்பது பலரது விருப்பமாகும்.
வாழ்க வர்த்தகம் வளர்க இந்திய பொருளாதாரம் 
ஜெய்ஹந்த் :::     
     


Tuesday, February 18, 2014

அன்பர்களே

புனேயில் சாக்லேட் கிருஷ்ணா நாடகம் 24/11/2013
மாலை 6.30 மணிக்கு புனே தமிழ்ச்சங்கம் சார்பாக
நேரு மெமோரியல் அரங்கத்தில் நடைபெற்றது.
நாடகம் அரங்கம் நிரம்பி வழிய நல்ல கைதட்டலோடும் ரசிகளின் ஏகோபித்த வரவேற்போடும் நடந்தேறியது.
 

 குரிப்பாக இங்கு நாடகம் க்ரேசி மோகனனின் சிறந்த நட்பை வெளிப்படுத்துவதாகவும் அவரது ஆருயிர் நண்பர் திரு சு.ரவி தனது நண்பநாக மட்டுமல்லாமல்  தனது ஆசானாக  விளங்குவதையும்  சபையில் அறிமுகபடுத்தி விழாவை சிறப்பித்தது அரங்கத்தினரை மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.

உண்மையான நட்புக்கு இலக்கணம் கோப்பேருஞ்சொழரும் பிசிராந்தையாரும் என்று படித்திருக்கிறோம். ஆனால் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளாமலே
  நட்பை  பரிமாறிக்கொண்டனர். அந்த காலத்தில் டெலிபோன் வசதியோ கைபொன் வசதியோ இல்லை. அனால் இந்த நண்பர்கள் 24 மணி நேரமும் 365 நாட்களிலும் நட்பின் தொடர்பிலேயே இருப்பவர்கள் .அதற்கான சாதனங்கல்  நிறையவே  உள்ளனவே
செல் போன்,  இ மெயில் போன்றவைகள் . 

மோகன் சென்னையில் விடும் மூச்சை  சு.ரவி புனேயில் சுவாசிபார் என்றால் பாருங்களேன்.

திரு மோகன் அவர்கள் சு.ரவியை பற்றி குறிப்பிடும்போது எனக்கு எழுத்து,கலை,கவிதை அனைத்தும் சொல்லிக்கொடுத்த என் ஆத்மார்த்த குரு ,அவர்தான் எனக்கு ஆசான் என்றெல்லாம் வர்ணித்தார்.  மோகன் அவர்கள் எழுதும் கதையோ கதை வசனமோ வெண்பாவோ முதலில் சு ரவிக்கு தான் பரிசீலனைக்குச்செல்லும்.
அவர் அதை அவர் ஓகே செய்தால்தான் இவர் மேலும் தொடருவார்.
மேலும் இவர்கள் நட்பை  கிருஷ்ணரும்  குசேலரும் என்றும் சொல்லலாம்.  கிருஷ்ணர் மோகன்தான் அனால் குசேலர் ரவி குசேலரைப்போல் ஏழை பிராமணர் அல்ல . ஒரு பெரிய நிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார் இவர் நல்ல நிலைமையில் உள்ளார்.
சாதாரணமாக ஒருவரின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள் அதை திரு கிரேசி மோகனும் சொல்வார்.
 அதேபோல் மோகனுக்கு பின்னாலும்  இருக்கிறார், அனால் (பெண்- girls) இல்லை PEN (எழுதுகோல்) இவர் PEN க்கும் பின்னால் சு.ரவி இருக்கிறார்.  உலகில் எவ்வளவு பெரிய மனிதாராக இருந்தாலும் எல்லா  வெற்றிக்கும் நான்தான்காரணம்  என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த காலத்தில் எனது வெற்றிக்கு அனைத்தும் தன்  நண்பன் சு.ரவிதான் காரணம்  பகிரங்கமாக சபையில் எடுத்துரைப்பதற்கு விசால மனம் வேண்டும் அது திரு கிரேசி மோகனிடம் இருப்பது பாராட்டுக்குரியது. 
திரு சு.ரவி ஒரு களங்கமில்லாத நிறைகுடம் கிரேசி மோகனுக்கும் எங்கள் குழுவினருக்கும் கிடைத்த பொக்கிஷம். பெருமைக்கும் புகழுக்கும் ஆசையற்றவர், தன்னடக்கமானவர் என்பதை அவரை பார்த்தவரும் பழகியவரும் நன்கு அறிவர்.

Ravi Subramanian's profile photo               

என்னதான் இவருக்கு பின்னால் பலர்  இருந்தாலும்
இவருக்கு எழுதும் திறனை அளிக்கும் சரஸ்வதியும்,கலைவாணியும் PEN மூலம்தானே அருள் புரிகிறார்கள்.
ஆகவே வணங்குவோம் கலைவாணியை.
வளர்க மோகனின்  எழுது பணி 

அன்பன் சுந்தரராஜன்
 "Emporer's New Cloths" which
i read  during my school days:

""
A person in search of a livelihood shouted in a crowded place “ Come on Come on!  Take in bulk very cheap priced sarees, shirts, pants, chudidhar and all dress materials…”  and showed with his empty hands each and every items…People crowded there and could not understand anything as nothing there in his hands though he showed as if it is there…All were surprised… He further shouted that his cloth items will be visible only to a person born to a mother of utmost chastity.  Some people believed it, paid money and took the empty (clothes). They are fools. There were some intelligent persons also, who gave him severe beating and taken him to police.""

 Moral of this story is ‘nothing is invisible’
if ivisible is nothing"
Please send your feedback
Tks/Sundararajan
சமீப காலமாக அதிகரித்து வரும் தற்கொலைகள் (கோழைக்கொலைகள்)
அன்றாடம்  செய்தித்தாள்களில் படிக்கிறோம்.

இதற்கு முக்கிய காரணம் தோல்விகளையும் எதிப்புகளையும் எதிர்த்து வெற்றி காணமுடியாத கோழைத்தனமான அப்பாவிகளின் அவசர முடிவு.
எல்லா வெற்றிக்கும் முன்னால் கொஞ்சம் எதிர் நீச்சல் போடாமல் வெற்றி கிட்டாது என்பதை உணராதவர்கள்.

மாணவர்கள் மதிப்பெண் குறைவால் தற்கொலை ,மற்றும் காதல் தோல்வியால் தற்கொலை இப்படி பல.

முதலில் பள்ளி மாணவவர்களுக்கு:  தாங்கள் சரியாக படிக்காததால்தான் தேர்வு சரியாக எழுத முடியவில்லை  என்பதை உணர்ந்தால் தற்கொலை முடிவுக்கு வர மாட்டார்கள் . மேலும் தேர்வில் தோல்வியுற்றால் தற்கொலைதான் என்பது சரியான முடிவு அல்ல. ஏன் மறுமுறை தேர்வு எழுத வாய்ப்பு உள்ளதே மீண்டும் நன்றாக படிப்பில் கவனம் செலுத்துவதொடு , நம் பெற்றோர்கள் நம்மைப் படிக்க வைக்க படும் கஷ்டங்களை கருத்தில் கொண்டு பொறுப்புடன் அடுத்த தேர்வு எழுதி வெற்றி பெற முடியாதா?? ஏன் இந்த கோழைத்தனம். வாழ்க்கையில்  எல்லாப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு,  தோல்வியை ஒரு சவாலாக ஏற்று பெற்றோர்களை மதித்து அவர்களிடம் பிரைச்சனையை எடுத்துரைத்து  அவர்கள் அறிவுரைகளை ஏற்று அலட்சியம் செய்யாமல் அடுத்தமுறை நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற தன்நம்பிக்கையோடும்,பொறுப்போடும் தேர்வு எழுதினால் நிச்சியம் வெற்றி பெறுவது உறுதி.
உங்கள் செயல்பாட்டினால் உங்கள் உயிர் இழப்பதோடு 

உங்கள் பெற்றோர்களுக்கும் மற்றும் உங்களை சாரந்தவர்களும் மன உளைச்சலை கொடுத்துவிட்டுச் செல்கிறீர்கள்.
தற்கொலை முயற்ச்சியை கை விடுங்கள்.
வெற்றி உங்கள் கையில்.
காதல் தற்கொலைகள்: அதே போல் காதல் தற்கொலையும் அதிகரித்து வருகிறது.  இதற்கு சில முக்கிய காரணங்கள்: ஒருதலை காதலாக இருக்கலாம் (அ) வீட்டார்கள் எதிர்ப்பு காரணமாக இருக்கலாம் அல்லது சரியான நபரை தேர்வு செய்யாமல் இருக்கலாம்.

1) ஒருதலை காதல் தோல்வி என்பது முட்டாள் தனத்தின் விளைவு.  நாம் காதலிக்கும் ஆணோ பெண்ணோ  நம்மை அவர்கள் காதலிக்கிறார்களா என்பது கூட தெரியாமல் கண்மூடித்தனமாக காதலித்தால் அது உங்கள் முட்டாள்த்தனம்தானே ? அதற்க்கு பரிகாரம் தற்கொலையா?  அல்ல. அவருக்கு பதிலாக தன்னை விரும்பும் ஒருவரை மணம் புரிந்து சிறப்பாக வாழ்ந்து காட்டுங்கள் .

2) தவிர  பெற்றோர் /வீட்டார் எதிர்ப்புக்கு காரணம், அல்லது ஜாதியாக இருக்கலாம் அல்லது படிப்பிலோ தரத்திலோ காதலிக்கும் எதிர் நபர் தகுதி இல்லாமல் இருக்கலாம். இது போன்று எந்த காரணமாக இருந்தாலும் உண்மையான காதலுக்கும் உங்கள் துணிச்சலுக்கும் தடையே இல்லை.
தூக்கில் தொங்குவதை விட உங்கள் குடும்பத்தார் சொல்பவரை அல்லது நீங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொண்டு உங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் முன் சிறப்பாக சந்தோஷமாக அவர்கள் எதிர பார்த்ததைவிட ஒருபடி மேலாக வாழ்ந்து காட்டுங்கள். பின்பு ஏன்
ஏற்றுக்கொள்ள   மாட்டார்கள்.அந்த பொறுமையோ எதையும் எதிர்கொள்ளும் துணிவோ இல்லாதவர்கள் ஏன் காதலிக்கிறீர்கள்.காதல் என்பது புனிதமானது துணிச்சலானது. எனவே தடயங்களை தகர்த்தி வாழ்ந்து காட்டுங்கள்
கோழைத்தனத்தை அகற்றுங்கள் துணிச்சலை கடைபிடியுங்கள். தற்கொலையை கை விடுங்கள்  .
இதுவே நீங்கள் உங்கள் பெற்றோர்களுக்கும் சமுதாயத்திற்கும் செய்யும் நற்பனியாகும்.
அனைவரும் இன்புற்று வாழ்வதே அனைவரின் விருப்பம்
அன்புடன்
சுந்தரராஜன் -9003095640
நங்கநல்லுரிலிருந்து
எழுதிகிறேன்

எனது ண்ணத்துகள்களை என் சிற்றறிவுக்கு
தோன்றியதை எழுதியுள்ளேன் .
பிழை இருப்பின் திருத்தம் செய்துகொள்ளவும் 

இது தனிப்பட்ட யாரையும் குறிப்பிட்டோ
மனதிற்க்கொண்டோ எழுதப்படவில்லை
அனைத்தும் கற்பனையே ::::::
குரு சிஷ்யன்

குரு என்பவர் யார்  எப்படி இருப்பார்?? :அவர் நடத்தை நல்லதாகவும்
அவர் தொழிலில்  சிறப்பாக செயல் படுபவராகவும், கீழ்த்தரமான குணம்
இல்லாதவரும்  உயர்த்த,  நேர்மையான சிந்தனைசெயல்பாடுகள்   உள்ளவராகவும்,
அவரை  மற்றவர்கள் பின்படுதும்படியாகவும் உள்ளவர்களையே குரு என்று
ஏற்றுக்கொள்ளலாம். அப்படி அல்லாதவர்களை  எந்த விதத்திலும் குருவாக
என்ற சொல்லுக்கே அருகதையற்றவர்கள் எனலாம்.
மேலும் இவர்கள் தன் சிஷ்யர்கள் என்று  நினைப்பவர்கள் தன்னை குருவாக
ஏற்றுக்கொண்டார்களா என்பதைக்கூட அறியாமல் தன்னை குரு என்று
தம்பட்டம் அடித்துக்கொள்வர்.
முதற்கண் குரு  என்று தன்னை நினைப்பவர்கள் :அவர்களுக்கு முக்கியமாக
தியாக மனப்பான்மை இருக்க வேண்டும்.  நாம் யாருக்கு என்ன செய்துள்ளோம்
யாருக்காக எதை விட்டுகொடுத்துள்ளோம் நமக்கு யார் யார் என்ன என்ன உதவிகள்
செய்துள்ளார்கள் அதற்கு நாம் பிரதி உபகாரம் ஏதாவது செய்துள்ளோமா.
யாருக்காவது ஏதாவது  கொடுதுள்ளோமா, என்றும், சுயநலமல்லாமல் பொது
நலமாக ஏதேனும் செய்துள்ளோமா, என்பதையெல்லாம்  சீர் தூக்கிப் பார்க்க 
வேண்டும்.முதலில்  தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

சாதனை என்பது தகுதிக்கும் திறமைக்கும் கிடைக்கவேண்டும்.
வயதிற்கும் வருடத்திற்கும் கிடைப்பதில்லை. அப்படி என்றால்
மரம்,  செடி, கோடி, சுவர், மண்,  கல் போன்றவைகளுக்கும்
இந்த சாதனை பொருந்தும் .
இந்த லக்ஷ்ணத்தில் :  எந்த  பாரம்பரியமும் சரித்திரமும் இல்லாதவர்கள் 
தன்னை நல்ல பாரம்பர்யத்தின் வாரிசாக காட்டிகொல்வதற்க்காக
இல்லாத பெயர்களையும் ,பல பொய்யான தவல்களையும் கூறி,
தன்னை ஸ்திறப்படித்து கொள்வர்
நடிப்புத்துரைக்கும் இதற்கும் சிறு சம்பந்தம்.
நடிகர் திலகம் செவாலியர் என பல பாராட்டுக்குரியவர் பல படங்களில் பல
பாத்திரங்களை சிறப்புறவும் மை சிலிர்க்கவும் செய்தவர் , மற்றும்  நடிப்புத்
 திறமைக்காக  பல பட்டங்களையும் பதக்கங்களையும் பெற்றவர் நடிகர் திலகம்
சிவாஜி கணேசன்அவர்கள். மேலும் S.V. சுப்பையா ,நாகையா S.V.ரங்கா ராவ்
இப்போதுள்ள  திரு டெல்லி குமார், டெல்லி  கணேஷ் ,நாசர் போன்ற பல நடிகர்கள்
பல குணச்சித்திர கதா பாத்திரங்கள் செய்து பாராட்டுக்கள் பெற்றுள்ளனர்.
அவர்கள் ஒரே கதா  பாத்திரத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும்
கதா பாத்திரத்தின் பெயரை பட்டப் பெயராக சூட்டிக்கொள்வதில்லை
அவர்கள் அப்படி செய்தாலும் தகும்.
அனால் சிலர் புகழ் கியாஜியில்,  எங்கே கதாப்பாத்திரத்தின் பெயரை சூட்டிக்கொண்டால்
கதாசிரியருக்கு புகழ் போய்விடுமோ என்று எண்ணி கதா பாத்திரத்தின் உறவை
தன்  பட்டப் பெயராக சூட்டிக்கொள்வர்.
பாவம் இப்படிப்பட்ட  திறமைசாலிக்கு யாரும் எந்த பட்டமும் வழங்க வில்லைபோலும்.
வாழ்க உண்மை/திறமை  வெல்க நேர்மை
உண்மை விரும்பும்
சுந்தரராஜன்
முயற்சித் திருவினை ஆக்கும் என்று சொன்னார் வள்ளுவனார்
முதலில் மக்களை முயற்சி செய்ய அனுமதிக்கவேண்டும்!
                   எது எப்படி சாத்தியம்             

" பாமர மக்களுக்கு  இலவசங்கள் பல! குறைந்த விலையில் பல!
படித்து வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு பணம்படிக்காததால்
தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு உதவித்தொகை மற்றும்
ஓட்டுக்கு பணம் , வீட்டுக்கு பணம் போட்டிக்கு பணம்  மலிவு 
விலையில் பொருட்கள்.

மேலும் வாராத கடன்கள் பல உதாரணங்கள்:: தகுதியற்றவர்களுக்கு கடன் 
தகுதி உள்ளவர்களுக்கு கிடைப்பதில்லை இப்படிப்பல! இது ஒரு புறமிருக்க விவசாய நிலங்கள் அனைத்தும்
குடியிருப்பு  பகுதிகளாக மாறி வருகிறது. ஏழை விவசாயிகளிடமிருந்து   
குறைந்த விலையில் வாங்கி பன்மடங்கு லாபத்திற்கு வீடாக்கி
விற்க்கபடுகிறது இப்படி இருக்க விளைச்சலில்லை, விளைச்சலுக்கோ நிலமில்லை,
எனவே  பொருளாதாரம் உயர வாய்ப்பில்லை  பன்மடங்கு சரிந்து வருகிறது.

இந்நிலையில் பிரசவத்திற்கு இலவசம்,  குழந்தை படிப்பிற்கு இலவசம், பிறகு கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் இருப்பது பெண் சிசு என்றால்  திருமணதிற்கு  இலவசம் இப்படியாக எல்லோரும் இலவசதிற்க்கு அட்மைகலாக மாறிக்கொண்டே  போனால்
நாடு எப்போது முன்னேற்ற பாதையில் மாறும். மனிதர்களிடம் உழைப்பு போய்விட்டது எல்லோருக்கும் எல்லாம் இலவசமாக  கிடைத்தால்  ஏன் உழைக்க வேண்டும் என்ற எண்ணம்
தோன்றினால் 
எது மாறுவது எப்போ மாற்றுவது யார்???

இங்ஙனம்
சுந்தரராஜன் 


பெருமைக்குரிய முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் மாண்புமிகு M.G.R அவர்கள்  VM ஜனகியோடு அட்வோகேட்
ஜெனெரல் NC ராகவாச்சாரியார் அவர்களின் சஷ்டியப்த பூர்த்திக்கு
1980 இல் வருகை தந்தபோது அவர்களுக்கு சந்தனம் கொடுத்து வரவேற்க
அடியேனுக்கு
வாய்ப்பு கிடைத்தது என்பதில் பெருமை கொள்கிறேன்.

தங்கள் மேலான கருத்தை வரவேற்கும்
அன்பன் சுந்தரராஜன்

Sundararajan Srinivasan threeyesstar@gmail.co



Friday, January 31, 2014

"ஒரு மனைவி உருவாகிறாள்"


 1979 ம்  ஆண்டு நாடக மித்ரா (மாலியின்) குழுவின் N.S ரவி சங்கர் வசனத்தில் உருவான நாடகம் "ஒரு மனைவி உருவாகிறாள்" 
அதில் நான் குருவின் சிஷ்யனாக முக்கிய  நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.  மற்றொரு சிறப்பு அம்சம் மறைந்த பழம் பேரும் நடிகை திருமதி சுந்தரிபாய் அவர்களுடன் நான் நடித்துள்ளேன்.  இந்த நாடகத்தின் 100 ஆவது நாடக விழாவில் இயக்குனர் திரு S.P. முத்துராமன் அவர்கள் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினார்
Director SPM இடது புறம் 3ஆவதாக நிற்பவன்
அடியேன்,, எனக்கு முன்னாள் நிற்பவர் சுதாங்கன். மாலிக்கு பக்கத்தில் சுந்தரிபாய் அவர்கள் அமர்ந்திருக்கிறார்.



"ஒரு மனைவி உருவாகிறாள்"