Monday, June 16, 2014

S.S.சுந்தரராஜன் -மேடை/டிவி/சினிமா -நடிகர்

எனது கலைத்தொண்டு:  1976 இலிருந்து தொடங்கியது  முதலில் All India Radio Auditioned Artiste:  திரு கூத்தபிரான் ,MK மூர்த்தி, புனிதவதி இளங்கோவன்,  ஐயப்பன் T கணேசன், சாந்தி தணிகாசலம் (Commercial) T.தாண்டவராயன் (வயலும் வாழ்வும்) போன்றோர் காலத்திலிருந்து, அங்கு Drama, Commercial, Form and Home போன்ற அனைத்து Section னிலும் நடிப்பு, தொகுப்பு, வர்ணனை, போன்ற எல்லா பணிகளையும் செய்துள்ளேன்.

சபா அனுபவம்  கபாலி பைன் ஆர்ட்ஸ் என்ற சபாவில் 15 ஆண்டுகள் கமிட்டி மெம்பர் ஆக இருந்ததில் அனைத்து நாடகக் குழுவினர்களோடும், மற்றும் கச்சேரி வித்வான்கள் மற்றும் நாட்டிய நடன கலைஞர்கள் போன்ற பலரது  நெருங்கிய நட்பும் பரிச்சியமும் உண்டு.  மேலும் சாபாவின் பல்சுவை  கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்ப்பேன்..

மேடை நாடகம்: முதலில்குடந்தை மாலியின் நாடக மித்ரா குழுவில்
1) ஒரு மனைவி உருவாகிறாள்-100 முறை 2)வேஷங்கள்-75 முறை 3)கோபுரம் தாங்கும் பொம்மைகள்-50 முறை நடித்துள்ளேன். . 

ஒரு மனைவி உருவாகிறாள் 100ஆவது நடகத்திற்கு Dir. திரு S.P முத்துராமன் அவர்கள் வந்து நாடகத்தையும் எனது கதா பாத்திரத்தையும் வெகுவாக பாராட்டினார்.

கிரேசி குழுவில்  1982 முதல் கிரேசி மோகன் குழுவில் இன்றுவரை பல விதமான பாத்திரங்கள் ஏற்று நடித்துக்கொண்டு இருக்கிறேன். பல பாராட்டுகளும் கிடைத்துக்கொன்டிருக்கின்றன.

குறிப்பாக எனக்கு மேடை நாடகங்களில் சிறந்த பெயர் வாங்கிக்கொடுத்த பாத்திரங்கள்:1) மீண்டும் க்ரேசி தீவ்ஸ்- அப்பன்ணா சாஸ்த்ரிகள், 2) ஒரு பேபியின் டைரி குறிப்பு - மாதுவின் மச்சினன் உப்பிலி 3) கிரேசி கிஷ்கிந்தா ஆராவமுதன் (மாதுவின் அப்பா) 4) அலாவுதீன் 100 வாட்ஸ் பல்ப் =வேணு மற்றும் நரசிமாச்சாரி 5)மாது +2- காது கேக்காத சாஸ்த்ரிகள் 6) சாட்லைட் சாமியார் கான்ஸ்டபிள் நாய்டு 7) 36 பீரங்கி லேன்-வரதன்  8) மீசை ஆனாலும் மனைவி -சீனு  மற்றும் குஷ்மா தேவி (ஆண் /பெண் வேடம்-ஸ்திரி பார்ட்)

எல்லாவற்றையும் விட மிகுந்த பேரும் புகழும் வாங்கிக் கொடுத்த அனைவராலும் பாரட்டபெற்ற  தற்போது மேடை அரங்குகளை சிரிப்போலியில் அதிர  வைத்துகொண்டிருகின்ற எங்கள் "" சாக்லேட் கிருஷ்ணா"" நாடகத்தில் பாட்டி கதா பாத்திரம்.மேலும் கூகுல் கட்ோத்கஜன் நாடகத்தில் பாட்டியாகவும் சின்ன பொண்ணு கவ்சியாகவும் நடித்துள்ளேன்:பல விருதுகள் கிடைத்த்தது::

மேலும் சில Substitute ரோல்களையும் சிறப்பாகச் செய்துள்ளேன்
மேடை நாடகம் மட்டும் 65000முறை நடித்துள்ளேன்.
நடித்த பகுதிகள் வெளி நாடுகள்: அமெரிக்கா முழுவதிலும் 4 முறை ஆசியா  சிங்கப்பூர் ,ஸ்ரீலங்கா, ஜகார்த்தா(Indonesia),பாங்காக், ஹாங்காங், துபாய் ,மஸ்கட், குவைத், அபுதாபி சீஷெல் போன்ற நாடுகளுக்கு பல முறை சென்றுள்ளோம்....மற்றும்  பம்பாய், டெல்லி,கல்கத்தா ஹைதராபாத், கொச்சின்,திருவனந்தபுரம் பெங்களூர் , கோவை,மதுரை,திருச்சி என இந்தியாவில் நடித்துள்ளேன்....
மேலும் சில நாடுகளிலிருந்து அழைப்பு வந்த வண்ணம் உள்ளது. 
அடுத்த ஆண்டு அந்த நாடுகளுக்கு செல்வோம்.. ,        . 

டிவி சீரியல்கள்:எங்கள்  ’’கிரேசி கிரியேஷன்ஸ்’’குழுவின் எல்லா TV சீரிலிலும் முக்கிய வேடமேற்று நடித்துள்ளேன்..கிட்டத்தெட்ட 300 வாரங்கள் நடித்துள்ளேன்.

மற்றவை:  ஜெயஸ்ரீ பிக்சர்ஸ் S.V ரமணனின்  பெரும்பாலும்  எல்லா தொடரிலும் நடித்துள்ளேன் அதில் திரு YG மகேந்திரன் வெண்ணிற ஆடை மூர்த்தி, சச்சு ஆகியோரோடு  நடித்துள்ளேன்.

இப்போது புது யுகம் சேனலில் திரு சுரேஷ் கிருஷ்ணாவின் ""உணர்வுகள்"" 
சீரியலில் திரு டெல்லி கணேஷ் அவர்களோடு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளேன். மேலும் இப்போது "அரங்கேற்றம்" தொடரிலும் நடித்துக்கொண்டிருக்கிறேன்.  

பத்து மணிக் கதைகள் தொலைத் தொடர் .
தவிர பொதிகை தொலைக் காட்சியில் ரதீஷ் இயக்கத்தில்  "வாழ்வே தாயம் என்ற தொடரில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.   .          . .   

இது தவிர கவிதைகளும் கட்டுரைகளும் எழுதுவேன்.

நான் நடித்த சில திரைப்படங்கள் 1) கமலின் மைக்கேல் மதன காமராஜன், ஷங்கரின் ""ஐ"" ,முக்தா பிலிம்ஸ் கதா நாயகன் , காவல் கீதம், தம்பி பொண்டாட்டி போன்ற படங்களில் சிற்சிறு வேடங்களில் நடித்துள்ளேன். 

"சமன்பாடு" என்ற Telefilm ல் நடித்துக்கொண்டிருக்கிரேன். 

மேலும் சில விளம்பரங்களில் நடித்துள்ளேன். 

எனது கலை ஆர்வத்தை ஊக்குவித்து என்னை ஒரு சிறந்த நடிகனாக்கிய திரு கிரேசி மோகன் SB காந்தன் திரு குடந்தை மாலி அவர்களுக்கும் மற்றும் சக நடிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெறிவித்துக்கொள்கிறேன்.

என்றும்  கலைப்பணி தொடர விரும்பும் 
அன்பன் சுந்தரராஜன் .
கைபேசி :9003095640   

No comments:

Post a Comment