Tuesday, February 18, 2014

முயற்சித் திருவினை ஆக்கும் என்று சொன்னார் வள்ளுவனார்
முதலில் மக்களை முயற்சி செய்ய அனுமதிக்கவேண்டும்!
                   எது எப்படி சாத்தியம்             

" பாமர மக்களுக்கு  இலவசங்கள் பல! குறைந்த விலையில் பல!
படித்து வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு பணம்படிக்காததால்
தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு உதவித்தொகை மற்றும்
ஓட்டுக்கு பணம் , வீட்டுக்கு பணம் போட்டிக்கு பணம்  மலிவு 
விலையில் பொருட்கள்.

மேலும் வாராத கடன்கள் பல உதாரணங்கள்:: தகுதியற்றவர்களுக்கு கடன் 
தகுதி உள்ளவர்களுக்கு கிடைப்பதில்லை இப்படிப்பல! இது ஒரு புறமிருக்க விவசாய நிலங்கள் அனைத்தும்
குடியிருப்பு  பகுதிகளாக மாறி வருகிறது. ஏழை விவசாயிகளிடமிருந்து   
குறைந்த விலையில் வாங்கி பன்மடங்கு லாபத்திற்கு வீடாக்கி
விற்க்கபடுகிறது இப்படி இருக்க விளைச்சலில்லை, விளைச்சலுக்கோ நிலமில்லை,
எனவே  பொருளாதாரம் உயர வாய்ப்பில்லை  பன்மடங்கு சரிந்து வருகிறது.

இந்நிலையில் பிரசவத்திற்கு இலவசம்,  குழந்தை படிப்பிற்கு இலவசம், பிறகு கர்ப்பிணி பெண்கள் வயிற்றில் இருப்பது பெண் சிசு என்றால்  திருமணதிற்கு  இலவசம் இப்படியாக எல்லோரும் இலவசதிற்க்கு அட்மைகலாக மாறிக்கொண்டே  போனால்
நாடு எப்போது முன்னேற்ற பாதையில் மாறும். மனிதர்களிடம் உழைப்பு போய்விட்டது எல்லோருக்கும் எல்லாம் இலவசமாக  கிடைத்தால்  ஏன் உழைக்க வேண்டும் என்ற எண்ணம்
தோன்றினால் 
எது மாறுவது எப்போ மாற்றுவது யார்???

இங்ஙனம்
சுந்தரராஜன் 

No comments:

Post a Comment