என்றும் இளமை,இனிமை எப்படி
எந்த வயதினரும் உடலால் மனத்தால் இளமையாக இருக்க முடியும். அதற்க்கு லேகியம் சூரணம் சாப்பிட வேண்டாம்.
அதற்க்கான வழி முறைகள்:
அதற்க்கான வழி முறைகள்:
- முதலில் எதற்கும் டென்ஷன் ஆவதை தவிர்க்க வேண்டும்.
- அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட வேலையோ அல்லது குறிப்பிட்ட நேரத்தில் கட்டாயம் முடிக்க வேண்டிய வேலையோ தவிர மருத்துவம் சம்பத்தப்பட்ட வேலையோ தாமதிக்க கூடாது!
- மற்றபடி இன்று நினைத்த காரியம் இன்றே இப்பொழுது நடக்க வில்லையே என்று நினைப்பது, இதை வாங்க முடியவில்லையே, அதை வாங்க முடியவில்லையே என்று நினைப்பதை தவிர்த்தல்!
- தெளிவாக நேரான பாதையில் நாம் செல்லும்போது மற்றவர் அறிவுரையோ குருக்கீடலையோ பொருட்படுத்தாமல் இருத்தல்!
- யாரிடமும் அதிகமாக பேசாதிருத்தல்! சம்பந்தமில்லாதவர்களிடம்
தானே அறிமுகம் செய்துகொள்வது சம்பந்தமில்லாத விஷயங்கள்
பேசுவது தவிர்க்கப்படவேண்டியது. - தேவையற்ற இடத்தில நம்மைபற்றி பெருமை பேசுவது, அடுத்தவரை குறை கூறுவது இவற்றை தவிர்க்க வேண்டும்.
- அதிக சிந்தனையும் கற்பனையும் தவிர்க்க வேண்டும்.
- தேவைக்கு அதிகமான உணவு உண்ணாதிருத்தல் ஆனால் கண்டிப்பாக நேரத்தில் தேவையான உணவு உண்ணுதல் .
- நம்மை நேரில் புகழ்வது பின்னால் இகழ்வது இரண்டையும்பொருட்படுத்தாமல் இருத்தல்.
- வஞ்சனையற்ற உடல் உழைப்பு.
- பிறர் மனம், உடல் நோக காரணமாக நாம் இல்லாதிருத்தல்.
- நமக்கு வாழ்வில் கிடைத்த செல்வங்கள்,புகழ்ச்சி இகழ்ச்சி அனைத்தும் இறைவனுக்கே அர்ப்பணம் என்ற தெளிவு.
இவை யாவும் கடை பிடித்தால் மட்டுமே நாம் என்றும் இளைமையாக இருப்பது நிச்சயம் முயற்சி திருவினையாக்கும்!
ஆரோக்கிய ஆர்வலன்
சுந்தரராஜன்