Monday, July 4, 2011

தமிழ் நாட்டில் ஜெயலலிதா ஆட்சி

 
தமிழ் நாட்டில்   ஐந்து  வருட இடைவெளிக்குப்பிறகு
புரட்சி தலைவி ஜெயலலிதாவின் தலைமையில் 
அமைந்ததில் அனைத்து சாராருக்கும் மகிழ்ச்சியே

ஜெயலலிதாவின் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களும்     
அவரது துரித நடவடிக்கைகளும் எப்பொழுதும்போல்
அவரது சிறப்பாற்றலை பிரதிபலிக்கிறது.

ஆனால் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்
ஆ தி மு கவின் அமோக வெற்றி அனைத்து தரப்பினரும்
எதிர் பார்த்ததே!  முக்கிய காரணம் முன்னாள் தி மு கே ஆட்சியின்
உலக மகா ஊழல் ,அராஜகப்போக்கு, குடும்ப சுயநலம் மற்றும்
சமுதாய சீர்கேடுகள் என்று அடிக்கிக்கொண்டே போகலாம்.
மேலும் இலவசம் என்பதே மறைமுக லஞ்சம் கொடுத்து ஓட்டு வாங்குவது. அப்படியே கொடுத்தாலும் தேர்தல் நேரத்தில் கொடுக்கும்
இலவசங்கள்  வாழ்க்கை நடத்தவும் குடும்ப நலத்திற்கும் எவ்வளவு
நாட்கள் கை கொடுக்கும். வாழ்க்கைக்கு தேவையான  மற்ற ஜீவாதாரங்களை எங்கு/எப்படி  பெறுவார்கள். தவிர நம் வரிப்பணத்தை நமக்கே தானமாகக்கொடுத்து ஓட்டை பறிக்கின்றனர் 

இந்த  நடைமுறை மக்களை முட்டாள்களாக்கவும் எப்பொழுதும்
அடுத்தவர்களை சார்ந்தும் கை ஏந்தி நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்படும் . மாறாக இலவசங்களை தவிர்த்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல எல்லாத்துறைகளிலும்  உற்பத்தி திறனை பெருக்கி வேலை வாய்ப்பை உருவாக்கி  அனைவரும் உழைத்து பொருள் பணம் ஈட்ட வகை செய்தால்  இலவசங்களை யாரும் வாங்காத நிலை உருவாக்கலாமே? அதுதானே அரசின் கடமை, சாதனை, பெருமை.


ஜெயலலிதாவின் அறிவுப்பூர்வமான சிந்தனை பாராட்டுக்குரிய ஆளும் திறன் சிறப்பான செயல் பாடுகள் தமிழக மக்களின் முழு ஆதரவு இதனை இருந்தும்
இவர் ஏன் இலவச திட்டங்களை முன் வைக்கிறார்? இது இவரது மாட்சிமைக்கு உகந்தது  அல்ல என்பது இவர்கள் ஆதரவாளர்கள் கருத்து 
    
மற்றபடி இவர் செயல் பாடுகள் அனைத்தும் போற்றக்ககூடியதே
இவரே நிரந்தர முதல்வராக நிலைக்கக்கூடிய தகுதியும் திறமையும் உள்ளவர் என்பதில் ஐயமில்லை!

சுந்தரராஜன்
க்ரோம்பேட்   

 

Thursday, April 14, 2011

தேர்தல் ஆணையத்தின் மெத்தனப்போக்கு

தமிழ் நாடு சட்ட சபை தேர்தல் 2011 ஐ பொறுத்த வரையில் இந்த முறை தேர்தல்
ஆணையம் மிகவும் சிறப்பாக செயல் பட்டு இருக்கிறது. குறிப்பாக நகரம் முழுக்க வேட்பாளர்களின் வானுயர பேனர்கள், கட் அவுட்டுகளை  அகற்றி நகரத்தின் அழகு சீர் குலையாமல் பாது காத்தனர்.

அதே சமயம் தேர்தல் அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் தங்கள் பணியை
நேர்மையாகவும் சரியாகவும், திறம்பட, மற்றும்  கட்சிகாரர்களுக்கு விலை போகாமல் பணி புரிய  அவர்களுக்குத்  தேவையான அடிப்படை  வசதிகள், குறிப்பாக சுத்தமாக சுகாதாரமாக  பராமரிக்கப்பட்ட இடங்களை வாக்குச்சாவடியாக தேர்வு செய்து, பெண்களுக்கென்று,ஆண்களுக்கென்று தண்ணீர் வசதியுடன் கூடிய தனித்தனி  கழிப்பறை மற்றும் உணவு/சிற்றுண்டி ஆகியவை தேர்தல் ஆணையமே வழங்கி இருக்க வேண்டும்.   தவிர  உணவருந்த  சுகாதாரமான, சுத்தமான இடம், குடிநீர்  இவைகள் அனைத்து   தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா  என்று தேர்தல் ஆணையம்  ஒவொரு ஓட்டுச்சாவடிகளிலும் உரிய அதிகாரிகளைக்கொண்டு நேரில் சென்று ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் பல ஓட்டுச்சாவடிகளில் மேலே குறிப்பிட்ட எந்த வசதிகளும் சரியாக செய்து தரப்படவில்லை, அவர்களுக்கு முறையான பாதுகாப்பு இல்லை. இது போன்ற  அடிப்படை வசதிகளையும் முக்கியமாககக் கருத்தில் கொண்டு முன் கூட்டியே ஆவன செய்திருந்தால் இந்த வசதியைக்  காரணம் காட்டி ஆணையத்தின்
அதிகாரிகளோ ஊ ழியர்களோ, தேர்தல் எண்ணிக்கை முடிந்து நியாயத்தின் வெற்றியை அறிவிக்கும் வரை கட்சிக்காரர்களுக்கு விலை போகாமல் ஜன நாயகம் பாது காக்கப்படும் .

மேலும் இது போன்று தொண்டு செய்பவர்களுக்கு  முழு பாதுகாப்பு
அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
இதுவே ஜன நாயக மக்களின் வேண்டுகோள்.

வாழ்க ஜனநாயகம் 
வந்தே மாதரம்

Monday, January 10, 2011

என்றும் இளமை,இனிமை எப்படி

என்றும் இளமை,இனிமை  எப்படி

எந்த வயதினரும் உடலால் மனத்தால் இளமையாக இருக்க முடியும். அதற்க்கு லேகியம் சூரணம் சாப்பிட வேண்டாம்.
அதற்க்கான வழி முறைகள்:  
  1. முதலில் எதற்கும் டென்ஷன் ஆவதை தவிர்க்க வேண்டும்.
  2. அலுவலகங்கள் சம்பந்தப்பட்ட வேலையோ அல்லது குறிப்பிட்ட நேரத்தில் கட்டாயம் முடிக்க வேண்டிய வேலையோ தவிர மருத்துவம் சம்பத்தப்பட்ட வேலையோ தாமதிக்க கூடாது!
  3. மற்றபடி இன்று நினைத்த காரியம் இன்றே இப்பொழுது நடக்க வில்லையே என்று நினைப்பது, இதை வாங்க முடியவில்லையே, அதை வாங்க முடியவில்லையே என்று நினைப்பதை தவிர்த்தல்!
  4. தெளிவாக நேரான பாதையில் நாம் செல்லும்போது மற்றவர் அறிவுரையோ குருக்கீடலையோ பொருட்படுத்தாமல் இருத்தல்!
  5. யாரிடமும் அதிகமாக பேசாதிருத்தல்! சம்பந்தமில்லாதவர்களிடம்
    தானே  அறிமுகம் செய்துகொள்வது சம்பந்தமில்லாத விஷயங்கள்
    பேசுவது  தவிர்க்கப்படவேண்டியது. 
  6. தேவையற்ற  இடத்தில நம்மைபற்றி பெருமை பேசுவது, அடுத்தவரை குறை கூறுவது இவற்றை தவிர்க்க வேண்டும்.
  7. அதிக சிந்தனையும் கற்பனையும் தவிர்க்க வேண்டும்.  
  8.  தேவைக்கு அதிகமான உணவு உண்ணாதிருத்தல் ஆனால் கண்டிப்பாக நேரத்தில் தேவையான உணவு உண்ணுதல் .
  9. நம்மை நேரில் புகழ்வது பின்னால் இகழ்வது இரண்டையும்பொருட்படுத்தாமல் இருத்தல்.
  10. வஞ்சனையற்ற உடல் உழைப்பு. 
  11. பிறர் மனம், உடல் நோக காரணமாக நாம் இல்லாதிருத்தல்.
  12. நமக்கு வாழ்வில் கிடைத்த செல்வங்கள்,புகழ்ச்சி இகழ்ச்சி அனைத்தும்   இறைவனுக்கே அர்ப்பணம் என்ற தெளிவு.

இவை யாவும் கடை பிடித்தால் மட்டுமே நாம் என்றும் இளைமையாக இருப்பது நிச்சயம் முயற்சி திருவினையாக்கும்!
 

இன்றுமுதல்  முயற்சி செய்வோமே!

ஆரோக்கிய ஆர்வலன்
சுந்தரராஜன்

Thursday, January 6, 2011

சேவை மனப்பான்மையற்ற போக்குவரத்துத்துறை

நாம் அன்றாடம் செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சிச் செய்திகளிலும் பார்க்கிறோம், கேட்கிறோம்  அரசுப்பேருந்துகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில்  பல விபத்துக்கள் தொடர்ச்சியாக நடை பெறுகின்றன. அதற்க்குக்  காரணம் ஓட்டுனரின் கவனக்குறைவு மற்றும் பழுதடைந்த பேருந்துகள் இயக்கப்படுவதால்,சாலைகள் பழுதடைந்ததால்   என்று துறையைசார்ந்தவர்கள்  கூறுகின்றனர், இதற்க்கு முடிவு எங்கே ! இதற்க்கு அரசு பொறுப்பும்  அரசு ஏற்க்க  வேண்டும்  ?
 
இது ஒருபுறமிருக்க மாநில போக்குவரத்துறை இன்னும் மோசமாக உள்ளது. எல்லா பஸ்களும் சுகாதாரமற்ற நிலையில்  இயக்கப்படுகிறது. கால் வைக்கும் இடமெல்லாம் குப்பையும் கூளமுமாக உள்ளது மேலும் மழைக்காலங்களில் சேற்றில் கால் வைப்பதுபோல் உள்ளது தவிர மேலிருந்து தண்ணீர் ஒழுக்கு. 

மழைக்காலங்களில் மழைச்சாரல் உள்ளே அடிக்கிறது மேலிருந்து தண்ணீர் ஒழுகுகிறது. ஒரு ஜன்னல் கதவுகூட  திறந்தால்  மூடுவதில்லை மூடினால் திறப்பதில்லை. வருடத்திற்கு ஒருமுறையாவது சுத்தம் செய்தால் பரவாயில்லை.

மாநகரப்பேருந்துகளில் இரவு நேரங்களில் நம்பர் ப்ளேட்டில் எரியும் விளக்கு என்னை இல்லாத அகல் விளக்குபோல் வெளிச்சமற்று மங்கலாக தெரிகிறது பார்வை சரியாக உள்ளவர்களும் படிக்க முடியாது.  பஸ் நெம்பர் மற்றும் எங்கு செல்கின்றது எதுவும்  தெளிவாக தெரிவதில்லை! சில பஸ்களில் போர்டு தலைகீழாக உள்ளது அதுமட்டுமல்லாமல்  முக்கால் வாசி பஸ்ஸில்பக்கவாட்டில் நம்பர்   ப்ளேட் கிடையாது அவசரமாக பஸ் கிளம்பும் தருவாயில் ஓடி வந்து ஏறிக்கொள்ளலாம் என்றால் பக்க வாட்டில் நம்பர் இல்லை.

மேலும் பஸ்கள் புறப்படும் நேரம் சரியாக கடை படிக்கப்படுவதில்லை. சில நேரங்களில் ஒரே வழி  மார்க்கப் பஸ்கள் அடுத்தடுத்து ஒன்றன் பின் ஒன்றாக
வருகிறது சில நேரத்தில் பல மணி நேரமாக எந்த பஸ்சும் வருவதில்லை.
 
அதிக மக்கள் பயன்பாட்டில் உள்ள சைதாபேட்டை  மற்றும் குரோம்பேட்டை
போன்ற இடங்களில் டைம் கீப்பர் இருப்பதில்லை அப்படி இருக்கும் இடத்தில இரவு 9 .00 மணிக்குமேல் யாரும் இருப்பதில்லை. சில நேரங்களில் ஒருவித அறிவிப்புமின்றி  ஓட்டுனரும்  நடத்துனரும் பஸ்ஸை ஓரமாக நிறுத்திவிட்டு டூட்டி முடிந்து விட்டதென்று  போய்க்கொண்டே இருக்கிறார்கள் .

இந்த்க்குறையை பொருப்பற்ற  செயலை  களைய டைம் கீப்பர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் சேவை மனப்பான்மையோடு செயல்படவேண்டும்! அரசு ஆவன செய்யவேண்டும்.

 
இதுவே அனைத்து பயணிகளின் கோரிக்கையாகும். 

சுந்தரராஜன்
 

Wednesday, January 5, 2011

முக்தி தரும் நகரேழில் முக்கியமாம் கச்சிதன்னில்-காஞ்சிபுரம்



முக்தி   தரும்  அத்திவரதன் முக்திநாத்தில் "ஸ்ரீ மூர்த்தியாய்" 
அருள்  பாலிக்கும்  ஆனந்த  கிருஷ்ணனாய்
காத்மாண்டுவில்  ஜலக்கிரீடையாய்  
ஜலப் பிரபாவத்தில்  ஆனந்த  சயனியாய் 
குடிகொண்ட "ஜல  நாராயணனே "|| 


கண்டாரை கடல் மல்லைத் தல சயனத்து  
ஊராரை கொண்டாடும்  நெஞ்சுடையார்  
அவர் எங்கள் குலதெய்வமே|||


அத்திகிரியின் அடியவன்
சுந்தரராஜன்

Tuesday, January 4, 2011

விண்ணைத்தொடும் விலைவாசி ஏற்றம்

சிந்திப்பீர் செய்யல்படுவீர்

ஆம் நாம் தினமும்உபயோகப்படுத்தும்அணைத்துஅத்தியாவசியப்
பொருட்களும் மற்றும் உணவுப்பொருட்களும் பன்மடங்கு விலை 
உயர்ந்துள்ளது. பல பொருளாதார வல்லுனர்கள் இதற்க்கு உற்பத்தித் 
திறனின்மையும் உழைப்புதிரனின்மையும் காரணம் என்கிறார்கள்.

காரணம்:-  ஒருபுறம் தன்னால் இயன்ற இலவசங்களை தந்து மேலும் 
ஒரு சாரருக்கு நியாய விலை கடையில் மலிவு விலை பொருட்கள் 
வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு உதவி (ஊக்கதொகை) நியாய 
விலைக்கடைகளில் வழங்கப்படும் 1 ருபாய் அரிசி பெரும்பாலான 
இடங்களில் தரமற்று மாட்டு தீவனமாகவும் பயன் படுகிறது. இலவச 
வீடு போன்ற  வாழ்க்கைக்குத்தேவையான அனைத்தும் அரசே இனாமாக
கொடுத்தால் மக்களுக்கு நாம் ஏன்  கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் 
என்ற மனப்பான்மை தோன்ற காரணமாகிறது.  போதாக்குறைக்கு
எங்கும் எல்லா பணிகளிலும் மலிவு விலை மதுவில் மயங்கி கிடக்கும்
மன்மத ராசாக்கள். எல்லாப்பணிகளிலும் மந்தம் லஞ்சம்.  எனவே 
உண்மை உழைப்பும்  நாட்டில் மங்கிவிட்டது.

இதற்க்கு  மத்திய (மந்த) அரசும் பொறுப்பேற்காது !!!!

இந்த வீழ்ச்சியை யார் சரி கட்டுவது ? யார் பொறுப்பேற்பது ?
நம் நாடு எப்போது ஊழளற்ற , குற்றமற்ற, நேர்மையான
நல்ல கலாச்சாரத்தை கடைபிடிக்கும்  வளம்பெற்ற நாடாக
மாறுவது என்பதே அனைத்து  இந்திய ப்ரஜைகளின் அவாவாகும்!!! 

அதற்க்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
 எப்படி செய்ய வேண்டும்?
எப்பொழுது செய்ய வேண்டும் ?


அன்புடன் இந்தியன்
சுந்தரராஜன்

ஜெயலலிதாவுக்கு இது சாத்தியமா


ஒரு வேளை வரும் 2011ல் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா பெரும்பான்மை பலம் பெற்று வெற்றி பெற்றாலும் தமிழகம் இப்போது உள்ள சூழலில் நாட்டை ஆள பல சிக்கல்களையும் சோதனைகளையும் சந்திக்க நேரிடும்: 
 
சரி செய்ய வேண்டிய குறை பாடுகள் பல உள்ளன அவற்றில் சில பின் வருவன:
 
முதலில் காலியான அரசு கஜானாவை நிரப்ப வேண்டும் அதற்க்கு ஜீவாதாரமான பொருளாதாரம் வீழ்சியைக்கண்டுள்ளது.
 
இந்தியா மட்டுமல்ல குறிப்பாக தமிழ்நாடு அத்தியாவசிய மற்றும் எல்லாப்போருட்களின் விளையும் வின்னைத்தொடுகின்றன. 

அரசுக்கு வருவாய் வரக்கூடிய  எந்த திட்டத்தை அறிவித்தாலும் எதிர்க்கட்சி சான்றோர்கள் மக்களைத் தூண்டிவிட்டு கலவரம் செய்வார்கள்.

ஏற்கனவே  பல திட்டங்களை அறிவிப்பு மட்டத்தோடு பல லக்க்ஷங்கள்  காலியாகிவிட்டது. மேலும் நஷ்டத்தில் இயங்கும் துறைகல்லுக்கு போனஸ்
மற்றும் சம்பள உயர்வு இது ஏற்க்ககூடிய
தா?

அரசின் பெரும்பாலான  துறைகளிலும் லஞ்சம் நேர்மையற்ற ஊழியர்கள், மேலும்  பெரும்பாலோருக்கு  மிதமிஞ்சிய பணத்தாசை மற்றும் பதவி வெறி, தவிர  தேசப்பற்று அற்ற அரசியல்வாதிகளின் ஆதிக்கம், தலையீடு,பதவி பலத்தை துஷ் பிரயோகம் செய்து அனைத்து அரசுத் துறைகளையும்  தன் வசம் வைத்துள்ளனர். அரசு சார்ந்த எல்லாப்பனிகளுக்கும் அவர்களுக்கு நன்கொடை அளித்தால்தான் வேலைகள்,  நடை பெறுகின்றன.

முக்கியமாக  பொது வாழ்வில், அரசியலில் மக்களுக்குச் சேவை செய்ய தன்னை ஆட்படுத்திக் கொள்பவர்கள் சுயநலமற்ற ஜாதி பேதமற்ற உயர்ந்த சிந்தனை கொண்டவர்களே  மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய
பிரதிநிதிகளாவார்.  ஆனால் தலைமைப்பொறுப்பில் இருந்துகொண்டு
இந்துக்கள் தவிர  மற்ற பிரிவினரின் விழாக்களிலும் பண்டிகைகளிலும் உற்சாகமாக கலந்துகொண்டு அவர்களை பெருமைப்படுத்துகிரார்கள்.தவறில்லை  அது அவரவர்தனிப்பட்ட கருத்து
மற்றும் விருப்பம். அனால் இந்துக்களையும் குறிப்பாக அந்தணர்களையும் துவேஷ மனப்பான்மையோடு அணுகுகிறார்கள்:
ஏன் இந்த பா ரபட்ஷம் ?அவர்களுக்கு  இந்துக்கள்/ அந்தணர்கள் ஆதரவு  தேவை இல்லையா? மேலும் தமிழ்நாட்டில் தற்போது கொலை கொள்ளை லஞ்சம்
கற்பழிப்பு ,மற்றும்  கையூட்டல் போன்ற  பல ஊழல்கள் சிக்கியுள்ளன ! இவற்ற்றை எல்லாம் களைந்து வேற்றிப்பாதையில் தமிழகத்தைக் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் ஒற்றுமையோடு பாடுபடச் செய்ய வேண்டும் அனைவரும் நலம்பெறவேண்டும்.  

ஜெயலலிதா இதை எதிர்கொண்டு சிறந்த உக்தியை கையாண்டு
 முழுமையான வெற்றிபெற வாழ்த்துவோம்!
 
அப்படி நடந்தால் ஜெவுக்கு ஒரு ஜே போடுவோம் 

வாழ்க தமிழ்

நல்லாட்சி விரும்பும்

அன்பன் சுந்தரராஜன்