Wednesday, December 22, 2010

தமிழ் கலை விலை(கொலை)ஆகிறது

  $$செம்மொழியான  தமிழ்மொழியாம்  பெருமை கொண்ட தமிழ் நாடே$$
தமிழனாய்ப்பிறந்து தமிழனாய் இருக்கும் தமிழ்ப்பால் 
பற்றுகொண்ட அனைத்து  தமிழர்களும் சிந்திக்க::::

உலகத்திலேயே சிறந்த மொழி, அழகான மொழி ,எளிய மொழி,  தமிழ் உண்மை!!

ஆனால் கடந்த சில வருடங்களாக தமிழ் கொலையாகிக்கொண்டு இருக்கிறது!!   
பலர் தமிழை   தமிழாக பேசுவதில்லை.  இதில் யாரும் எந்தத்துறையும் விதி விலக்கில்லை.

உதாரணம்:: பள்ளிகள் கல்லூரிகள் அரசுத்துறைகள் பொதுப்பணிதுறைகள் மற்றும் 
விளம்பரத்துறைகள்:  இதில் செய்திதாள்கள், சின்னத்திரைகள், பெரியத்திரைகள் 
மற்றும் பலவும் அடங்கும் :

முக்கியமாக மாணவர்களுக்கு தெளிவான தூய்மையான தமிழ் பேச தெரிவதில்லை.
அதற்க்கு ஆசிரியர்கள் தான் தனி கவனம் செலுத்தி மாணவர்களுக்கு சிறந்த தமிழை
போதிக்க வேண்டும். மேலும் தமிழ் கல்வி சார்ந்த துறைகள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.  நற்றமிழை பேன முக்கியத்துவம் அளிக்க வேண்டும்:
மற்றும் தமிழ் சார்ந்த எல்லாத்துறைகளிலும் தமிழர்கள் தமிழ்ப்பற்றோடு
செயல்படவேண்டும்""

குறிப்பாக: இந்தியக்குடியுரிமை அடையாள அட்டை வழங்குதல் , குடும்ப அட்டை , வழங்குதல் ஓட்டுனர் சான்றிதழ் வழங்குதல் ஓட்டுரிமை வழங்குதல், போன்ற முக்கியமான பெரும்பாலான அலுவலகங்களில் இந்த பெயர்க்கொலைகள்
அரங்கேறுகின்றன. பெயர்களை சரியாகக்கூட படிக்கத்தெரியாதவர்கள் 
அங்கேப் பணியில் உள்ளனர். 
திரைத்துறை :: முன்பெல்லாம் தமிழ் மாநிலம் அல்லாத அண்டை மாநிலத்தை சார்ந்தவர்கள் கூட  பல பேர்கள் நன்றாக தமிழ் பேசி  பல படங்களில் நன்றாக நடித்து தமிழுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்து இருக்கிறார்கள். அதற்காகவே  தமிழை
நன்றாக கற்று நல்ல உச்சரிப்போடு வசனம் பேசி சிறப்பாக நடித்தனர்.

இதில் கதா நாயகர்கள் நகைச்சுவை நடிகர்கள் மற்றும் பலரும் அடக்கம்.
பலர் நல்ல தமிழ் உச்சரிப்போடு அன்றும் இன்றும் பல புகழ்பெற்ற நடிகர்
நடிகைகளுக்கு பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

அனால் சில நாட்களாக தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து நான் தமிழன் என்று மார் தட்டிக்கொள்ளும் பல நடிகர்கள் ஒழுங்காக தெளிவாக தமிழ் பேசத்தெரியவில்லை. 
இதற்கு சில உதாரணங்கள்::
 தமிழ்க்கொலைகள் 
தமிழை -- தமில்      
அவர்களை  அவர்கல்               
தமிழ் மண்   தமில் மன்
வாழ்க           வால்க
பேயர்க்கொலைகள்: (ஆங்கிலத்திலோ (அ) சமஸ்க்ருத வார்த்தைகளோ
அதன் உச்சரிப்பை நாம் சொதுப்புவதற்கு நமக்கு அதிகாரம் கிடையாது) 
சமஸ்க்ருதக் கொலை::::
உஷா -  உசா 
ரக்க்ஷா பந்தன் - ரக்சா பந்தன் 
ரிக்க்ஷா - ரிக்சா 
ஆங்கிலக்கொலை 
ஆக்க்ஷன்- அக்சன் 
போர்ஷன் - போர்சன் 
கார்பொரேஷன்-கார்பொரேசன்     
இதுபோல் பல

ஏன் இந்த அவலம் இதில் பெரும்பாலும் புகழ் பெற்ற நடிகர்களும் அடக்கம். 
குறிப்பாக நகைச்சுவை நடிகர்கள் சிரிப்பு வராதபடி தனக்குத்தானே நகைசுவைபோல் ஏதோ உளறுகிறார்கள் கூடவே அவர்கள் சகாக்கள் 4 -5 பேர்கள் அவருக்கு ஒத்து ஊதுகிறார்கள்! 
நாம் இப்படி தவறுதாலாக பேசுகிறோமே என்று கொஞ்சம்கூட யோசிக்க மாட்டார்களா? 
இதற்க்கு யார் காரணம். நடிகர்களை இயக்குனரோ அல்லது வசனகர்த்தாவோ திருத்த வேண்டும். ஏன் அப்படி செய்ய மறுக்கிறார்கள்,  அவர்களுக்குத்தமிழ்  பற்று இல்லையா, அல்லது அவர்களுக்கே தமிழ் தெரியவில்லையா?

தொலைக்காட்சி   நிலையம் ! அறிவிப்பாளர், வர்ணனையாளர் மற்றும் பலர்
ஸ்டைலாக பேசுவதுபோல் வேகமாகப்  பேசுவது கொஞ்சம்கூட புரியாமல் உளறுகிறார்கள் பெயர்களை தப்பு தப்பாக வாசிக்கிறார்கள் மற்றும் மேடை பேச்சாளர்கள் சில பட்டிமன்றங்களில் சில பேராசிரியர்கள்,மற்றும் பலர் நம் மொழி மட்டுமல்லாமல் ஆங்கிலம் மற்றும் சமஸ்க்ருதம் போன்ற மொழிகளையும் கொலை செய்கிறார்கள்.

இது என்ன உயர்ந்த காலாச்சாரமா??

இதே நடைமுறையில் தமிழ் அல்லாது மற்ற மொழிகளையும் தவறாக உச்சரிக்கும் இப்படிப்பட்டவர்கள் வெளி  மாநிலங்களுக்கோ வெளி நாடுகளுக்கோ சென்றாலும் இதே தவறான முறையைக்கையாண்டால் மற்ற மாநிலத்தவர்களோ, மற்ற நாட்டவர்களோ இவர்களுக்கு எந்த மொழியுமே சரியாகப் பேச வராது என்று மட்டமாக நினைப்பர் மேலும் நமது  தமிழ்  நாட்டின் தரத்தை தாழ்வாக எடை போட ஏதுவாகிறது!!! 
இப்படி  தமிழை கொலை செய்துகொண்டு போனால் இதற்க்கு முடிவு ஏது !
தமிழன் தூயத்தமிழ் எப்போது பேசுவான்??
தமிழ் ஆர்வன்
சுந்தரராஜன்

1 comment: