சிவகாசிக்குச் சென்றோமானால் இரண்டு
முக்கிய புண்ணிய ஷேத்ரங்களை நம்மால்
தரிசனம் செய்யாமல் திரும்ப இயலாது
ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் சூடிக்கொடுத்த
சுடர்கொடியாள் திருப்பாவை நாயகி
ஸ்ரீ ஆண்டாள் மாலயிட்ட மணாளன்
ரங்க மன்னார் மற்றும் எம்பெருமான்
வடபத்ரஸாயி பெருமாள் பள்ளிகொண்ட சேவை
இரண்டு
திருத்தங்கலில் நின்ற திருக் கோலத்தில்
திருநராயணனாய்
திருவருள் புரியும் திருவேங்கடத்தானே
உன் பசுமைநிறத் திருமேனி அழகை பாடப்
பாட அழகு! உன் பளிங்குத் திருமேனி
அழகைப் பார்க்க பார்க்கப் பரவசம்
நான்கு நாச்சியார்களுடன் அருள்
பாலித்தருளும் அரங்கனே
மூலவர் செங்கமலதாயாரின் முதல்வனே
உன் தொண்டரடிப்பொடியனில் ஒருவனான
அடியேனுக்கு கருணைக் கடாக்ஷம்
பெறப்பெற்றதென் பெரும் பாக்கியமே
ஆசை என்னும் மேகம் அகன்று
ஆத்மா முக்தி பெற அருள் புரிய
வேண்டிடும் அடியேன் விண்ணப்பம் அன்யதா சரணம் நாஸ்தி
துமேவ சரணம் நமஹா
உன் சரணாகதி வேண்டும்
சரணாகதன்
அடியேன்
சுந்தரராஜ தாஸன் 9003095640


No comments:
Post a Comment