அன்பர்களே
புனேயில் சாக்லேட் கிருஷ்ணா நாடகம் 24/11/2013
மாலை 6.30 மணிக்கு புனே தமிழ்ச்சங்கம் சார்பாக
நேரு மெமோரியல் அரங்கத்தில் நடைபெற்றது.
என்னதான் இவருக்கு பின்னால் பலர் இருந்தாலும்இவருக்கு எழுதும் திறனை அளிக்கும் சரஸ்வதியும்,கலைவாணியும் PEN மூலம்தானே அருள் புரிகிறார்கள்.
புனேயில் சாக்லேட் கிருஷ்ணா நாடகம் 24/11/2013
மாலை 6.30 மணிக்கு புனே தமிழ்ச்சங்கம் சார்பாக
நேரு மெமோரியல் அரங்கத்தில் நடைபெற்றது.
நாடகம் அரங்கம் நிரம்பி வழிய நல்ல கைதட்டலோடும் ரசிகளின் ஏகோபித்த வரவேற்போடும் நடந்தேறியது.
குரிப்பாக இங்கு நாடகம் க்ரேசி மோகனனின்
சிறந்த நட்பை வெளிப்படுத்துவதாகவும் அவரது ஆருயிர் நண்பர் திரு சு.ரவி தனது
நண்பநாக மட்டுமல்லாமல் தனது ஆசானாக விளங்குவதையும் சபையில் அறிமுகபடுத்தி விழாவை
சிறப்பித்தது அரங்கத்தினரை மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.
உண்மையான நட்புக்கு
இலக்கணம் கோப்பேருஞ்சொழரும் பிசிராந்தையாரும் என்று படித்திருக்கிறோம்.
ஆனால் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளாமலே
நட்பை பரிமாறிக்கொண்டனர். அந்த காலத்தில் டெலிபோன் வசதியோ
கைபொன் வசதியோ இல்லை. அனால் இந்த நண்பர்கள் 24 மணி நேரமும் 365 நாட்களிலும்
நட்பின் தொடர்பிலேயே இருப்பவர்கள் .அதற்கான சாதனங்கல் நிறையவே உள்ளனவே
செல் போன், இ மெயில் போன்றவைகள் .
மோகன் சென்னையில் விடும் மூச்சை சு.ரவி புனேயில் சுவாசிபார் என்றால் பாருங்களேன்.
செல் போன், இ மெயில் போன்றவைகள் .
மோகன் சென்னையில் விடும் மூச்சை சு.ரவி புனேயில் சுவாசிபார் என்றால் பாருங்களேன்.
திரு
மோகன் அவர்கள் சு.ரவியை பற்றி குறிப்பிடும்போது எனக்கு எழுத்து,கலை,கவிதை
அனைத்தும் சொல்லிக்கொடுத்த என் ஆத்மார்த்த குரு ,அவர்தான் எனக்கு ஆசான் என்றெல்லாம்
வர்ணித்தார். மோகன் அவர்கள் எழுதும் கதையோ கதை வசனமோ வெண்பாவோ முதலில் சு ரவிக்கு தான் பரிசீலனைக்குச்செல்லும்.
அவர் அதை அவர் ஓகே செய்தால்தான் இவர் மேலும் தொடருவார்.
அவர் அதை அவர் ஓகே செய்தால்தான் இவர் மேலும் தொடருவார்.
மேலும் இவர்கள் நட்பை கிருஷ்ணரும்
குசேலரும் என்றும் சொல்லலாம். கிருஷ்ணர் மோகன்தான் அனால் குசேலர் ரவி
குசேலரைப்போல் ஏழை பிராமணர் அல்ல . ஒரு பெரிய நிறுவனத்தில் உயர்ந்த
பதவியில் இருக்கிறார் இவர் நல்ல நிலைமையில் உள்ளார்.
சாதாரணமாக ஒருவரின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்வார்கள் அதை திரு கிரேசி மோகனும் சொல்வார்.
அதேபோல் மோகனுக்கு
பின்னாலும் இருக்கிறார், அனால் (பெண்- girls) இல்லை PEN (எழுதுகோல்) இவர் PEN
க்கும் பின்னால் சு.ரவி இருக்கிறார். உலகில் எவ்வளவு பெரிய மனிதாராக இருந்தாலும் எல்லா
வெற்றிக்கும் நான்தான்காரணம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் இந்த
காலத்தில் எனது வெற்றிக்கு அனைத்தும் தன் நண்பன் சு.ரவிதான் காரணம்
பகிரங்கமாக சபையில் எடுத்துரைப்பதற்கு விசால மனம் வேண்டும் அது திரு கிரேசி
மோகனிடம் இருப்பது பாராட்டுக்குரியது.
திரு
சு.ரவி ஒரு களங்கமில்லாத நிறைகுடம் கிரேசி மோகனுக்கும் எங்கள்
குழுவினருக்கும் கிடைத்த பொக்கிஷம். பெருமைக்கும் புகழுக்கும் ஆசையற்றவர்,
தன்னடக்கமானவர் என்பதை அவரை பார்த்தவரும் பழகியவரும் நன்கு அறிவர்.

என்னதான் இவருக்கு பின்னால் பலர் இருந்தாலும்இவருக்கு எழுதும் திறனை அளிக்கும் சரஸ்வதியும்,கலைவாணியும் PEN மூலம்தானே அருள் புரிகிறார்கள்.
ஆகவே வணங்குவோம் கலைவாணியை.
வளர்க மோகனின் எழுது பணி
அன்பன் சுந்தரராஜன்வளர்க மோகனின் எழுது பணி