Friday, December 24, 2010

ஜீவாதார உரிமையைப் பறித்தல்

இறைவன் படைப்பில் அவரவர் பிறப்பின்படி அவரவர் தொழிலை, தர்மத்தை கடைபிடிப்பதுதான் மனித தர்மம்! இது அனைவருக்கும் பொருந்தும்!     

ஆனால் அரசியல் புள்ளிகள் சமத்துவம், முற்ப்போக்குக்கொள்கை என்ற பெயரில், தொன்றுதொட்டு பாரம்பரியத்தொழிலாக வாழ்வின் ஜீவாதாரமாக நற்பணி,பொதுப்பணி
செய்து வருபவரின் உரிமையை பறித்து தகுதி அடிப்படையற்ற வேறொருவருக்கு கொடுப்பது, எந்த வேலையையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்று வீண் வாதம் செய்வது எந்த விதத்தில் நியாயம் ஆகும்?

குறிப்பாக கோவில் நற்ப்பணிகள்  மற்றும் அர்ச்சகர் பணிகள் என்றால் ஓரளவுக்கு இறையான்மையில் ஈடுபாடு மற்றும் ஒழுக்கம் நேர்மை சேவை மனப்பான்மை 
போன்ற  சில  தகுதி அடிப்படை  உள்ளவர்களாகவும் அந்தந்த ஆலயங்களுக்கேற்ப     சற்றேனும்  ஆகம விதிகள் அல்லது வழிமுறைகள்  அறிந்தவராய் இருத்தல்  வேண்டும்!
இப்படி எந்த அடிப்படைத் தகுதிகளும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு தீங்கு
செய்யும் நோக்கத்தில் முன்பின் அனுபவம் இல்லாதவரை இதுபோன்ற பனிகளுக்கு
பரிந்துரை செய்வது சற்றும்  நியாமற்ற  செயல்.. அல்லாமல் அவரவர் தகுதிகேற்ப
பொருத்தமான பணி நியமனம் செய்வதில் எந்த ஆக்ஷேபனையும்  இல்லை:

எந்த வேலையாய் இருந்தாலும் யார் செய்தாலும் முறையோடு தொழில் தர்மத்தோடு   செய்தால்தான் முழுமை அடையும்.  இது எல்லாப்பணிகளுக்கும்  பொருந்தும் .

அப்படி இருக்க

இதுபற்றி சமீபத்தில் ஒரு  தொலைக்காட்சியில் கேள்வி நேரத்தில் ஒரு கட்சி சார்ந்த ஒரு ப்ரொமுகர் கூறுகையில்  பகுத்தறிவு தந்தை பெரியார் கூறினாராம் எந்த சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று.  கடவுள்/கோவில் போன்றவைகளில் மூட நம்பிக்கை என்று 
முழங்கிய  அவர் இதுபற்றி எப்படி பேசி இருப்பார்?

தனது தனிப்பட்ட கருத்து என்று கூறவேண்டியதுதானே?
ஏன் பெரியவர் பெயரை இழுக்க வேண்டும்!

மேலும் இது போன்ற வீண் வாதத்தை  இந்து அல்லாத மற்ற
பிரிவினரிடம் கூற முயற்சிக்கலாமே! ஏன் முனைவதில்லை ?

யாரும் எந்த வேலையும் செய்யலாம் என்றால் இவர்கள் வீட்டு 
சாக்கடை, கழிவறை  அடைத்துக்கொண்டால்,  தானே சரி செய்து
கொள்வதுதானே ஏன் மற்றவரை அழைக்கிறார்கள்? 

அதில் சமத்துவத்தை காணவில்லையா?

மற்றவருக்காக வக்காலத்து வாங்குபவர் முதலில்
தான் மாறிக்கொள்ளலாமே!  அவர்கள்  தான தர்மம்,
நற்ப்பணிகள் செய்யலாமே ! அதை விடுத்தது
சர்ச்சைக்குரிய வாதம் எதற்கு?  

அவரவர் வேலைகளை அவரவர் செய்தாலே
நாடு வளம் பெரும் நம் வீடும்  நலம் பெரும்.

மக்களில் ஒருவன்
சுந்தரராஜன்

Wednesday, December 22, 2010

தமிழ் கலை விலை(கொலை)ஆகிறது

  $$செம்மொழியான  தமிழ்மொழியாம்  பெருமை கொண்ட தமிழ் நாடே$$
தமிழனாய்ப்பிறந்து தமிழனாய் இருக்கும் தமிழ்ப்பால் 
பற்றுகொண்ட அனைத்து  தமிழர்களும் சிந்திக்க::::

உலகத்திலேயே சிறந்த மொழி, அழகான மொழி ,எளிய மொழி,  தமிழ் உண்மை!!

ஆனால் கடந்த சில வருடங்களாக தமிழ் கொலையாகிக்கொண்டு இருக்கிறது!!   
பலர் தமிழை   தமிழாக பேசுவதில்லை.  இதில் யாரும் எந்தத்துறையும் விதி விலக்கில்லை.

உதாரணம்:: பள்ளிகள் கல்லூரிகள் அரசுத்துறைகள் பொதுப்பணிதுறைகள் மற்றும் 
விளம்பரத்துறைகள்:  இதில் செய்திதாள்கள், சின்னத்திரைகள், பெரியத்திரைகள் 
மற்றும் பலவும் அடங்கும் :

முக்கியமாக மாணவர்களுக்கு தெளிவான தூய்மையான தமிழ் பேச தெரிவதில்லை.
அதற்க்கு ஆசிரியர்கள் தான் தனி கவனம் செலுத்தி மாணவர்களுக்கு சிறந்த தமிழை
போதிக்க வேண்டும். மேலும் தமிழ் கல்வி சார்ந்த துறைகள் இதில் கவனம் செலுத்த வேண்டும்.  நற்றமிழை பேன முக்கியத்துவம் அளிக்க வேண்டும்:
மற்றும் தமிழ் சார்ந்த எல்லாத்துறைகளிலும் தமிழர்கள் தமிழ்ப்பற்றோடு
செயல்படவேண்டும்""

குறிப்பாக: இந்தியக்குடியுரிமை அடையாள அட்டை வழங்குதல் , குடும்ப அட்டை , வழங்குதல் ஓட்டுனர் சான்றிதழ் வழங்குதல் ஓட்டுரிமை வழங்குதல், போன்ற முக்கியமான பெரும்பாலான அலுவலகங்களில் இந்த பெயர்க்கொலைகள்
அரங்கேறுகின்றன. பெயர்களை சரியாகக்கூட படிக்கத்தெரியாதவர்கள் 
அங்கேப் பணியில் உள்ளனர். 
திரைத்துறை :: முன்பெல்லாம் தமிழ் மாநிலம் அல்லாத அண்டை மாநிலத்தை சார்ந்தவர்கள் கூட  பல பேர்கள் நன்றாக தமிழ் பேசி  பல படங்களில் நன்றாக நடித்து தமிழுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்து இருக்கிறார்கள். அதற்காகவே  தமிழை
நன்றாக கற்று நல்ல உச்சரிப்போடு வசனம் பேசி சிறப்பாக நடித்தனர்.

இதில் கதா நாயகர்கள் நகைச்சுவை நடிகர்கள் மற்றும் பலரும் அடக்கம்.
பலர் நல்ல தமிழ் உச்சரிப்போடு அன்றும் இன்றும் பல புகழ்பெற்ற நடிகர்
நடிகைகளுக்கு பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

அனால் சில நாட்களாக தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து நான் தமிழன் என்று மார் தட்டிக்கொள்ளும் பல நடிகர்கள் ஒழுங்காக தெளிவாக தமிழ் பேசத்தெரியவில்லை. 
இதற்கு சில உதாரணங்கள்::
 தமிழ்க்கொலைகள் 
தமிழை -- தமில்      
அவர்களை  அவர்கல்               
தமிழ் மண்   தமில் மன்
வாழ்க           வால்க
பேயர்க்கொலைகள்: (ஆங்கிலத்திலோ (அ) சமஸ்க்ருத வார்த்தைகளோ
அதன் உச்சரிப்பை நாம் சொதுப்புவதற்கு நமக்கு அதிகாரம் கிடையாது) 
சமஸ்க்ருதக் கொலை::::
உஷா -  உசா 
ரக்க்ஷா பந்தன் - ரக்சா பந்தன் 
ரிக்க்ஷா - ரிக்சா 
ஆங்கிலக்கொலை 
ஆக்க்ஷன்- அக்சன் 
போர்ஷன் - போர்சன் 
கார்பொரேஷன்-கார்பொரேசன்     
இதுபோல் பல

ஏன் இந்த அவலம் இதில் பெரும்பாலும் புகழ் பெற்ற நடிகர்களும் அடக்கம். 
குறிப்பாக நகைச்சுவை நடிகர்கள் சிரிப்பு வராதபடி தனக்குத்தானே நகைசுவைபோல் ஏதோ உளறுகிறார்கள் கூடவே அவர்கள் சகாக்கள் 4 -5 பேர்கள் அவருக்கு ஒத்து ஊதுகிறார்கள்! 
நாம் இப்படி தவறுதாலாக பேசுகிறோமே என்று கொஞ்சம்கூட யோசிக்க மாட்டார்களா? 
இதற்க்கு யார் காரணம். நடிகர்களை இயக்குனரோ அல்லது வசனகர்த்தாவோ திருத்த வேண்டும். ஏன் அப்படி செய்ய மறுக்கிறார்கள்,  அவர்களுக்குத்தமிழ்  பற்று இல்லையா, அல்லது அவர்களுக்கே தமிழ் தெரியவில்லையா?

தொலைக்காட்சி   நிலையம் ! அறிவிப்பாளர், வர்ணனையாளர் மற்றும் பலர்
ஸ்டைலாக பேசுவதுபோல் வேகமாகப்  பேசுவது கொஞ்சம்கூட புரியாமல் உளறுகிறார்கள் பெயர்களை தப்பு தப்பாக வாசிக்கிறார்கள் மற்றும் மேடை பேச்சாளர்கள் சில பட்டிமன்றங்களில் சில பேராசிரியர்கள்,மற்றும் பலர் நம் மொழி மட்டுமல்லாமல் ஆங்கிலம் மற்றும் சமஸ்க்ருதம் போன்ற மொழிகளையும் கொலை செய்கிறார்கள்.

இது என்ன உயர்ந்த காலாச்சாரமா??

இதே நடைமுறையில் தமிழ் அல்லாது மற்ற மொழிகளையும் தவறாக உச்சரிக்கும் இப்படிப்பட்டவர்கள் வெளி  மாநிலங்களுக்கோ வெளி நாடுகளுக்கோ சென்றாலும் இதே தவறான முறையைக்கையாண்டால் மற்ற மாநிலத்தவர்களோ, மற்ற நாட்டவர்களோ இவர்களுக்கு எந்த மொழியுமே சரியாகப் பேச வராது என்று மட்டமாக நினைப்பர் மேலும் நமது  தமிழ்  நாட்டின் தரத்தை தாழ்வாக எடை போட ஏதுவாகிறது!!! 
இப்படி  தமிழை கொலை செய்துகொண்டு போனால் இதற்க்கு முடிவு ஏது !
தமிழன் தூயத்தமிழ் எப்போது பேசுவான்??
தமிழ் ஆர்வன்
சுந்தரராஜன்

Wednesday, December 8, 2010

திருத்தங்கலில் நின்ற திருக் கோலத்தில் திருநராயணனாய் திருவருள் புரியும் திருவேங்கடத்தானே



சிவகாசிக்குச் சென்றோமானால்  இரண்டு
முக்கிய புண்ணிய ஷேத்ரங்களை நம்மால்  
தரிசனம் செய்யாமல் திரும்ப இயலாது

ஒன்று      ஸ்ரீவில்லிபுத்தூரில் சூடிக்கொடுத்த
                    சுடர்கொடியாள்  திருப்பாவை நாயகி

                  ஸ்ரீ ஆண்டாள் மாலயிட்ட மணாளன்
                   ரங்க மன்னார் மற்றும் எம்பெருமான்

                    வடபத்ரஸாயி பெருமாள் பள்ளிகொண்ட சேவை

இரண்டு
 
திருத்தங்கலில்  நின்ற திருக் கோலத்தில்
திருநராய
னாய் 
திருவருள் புரியும் திருவேங்கடத்தானே
உன் பசுமைநிறத்  திருமேனி அழகை பாடப்
பாட அழகு! உன் பளிங்குத் திருமேனி
அழகைப் பார்க்க பார்க்கப் பரவசம்
நான்கு நாச்சியார்களுடன் அருள் 
பாலித்தருளும் அரங்கனே
மூலவர் செங்கமலதாயாரின்  முதல்வனே 
   
உன் தொண்டரடிப்பொடியனில்   ஒருவனான
அடியேனுக்கு கருணைக் கடாக்ஷம்
பெறப்பெற்றதென் பெரும் பாக்கியமே 
ஆசை என்னும் மேகம் அகன்று
ஆத்மா முக்தி பெற அருள் புரிய
வேண்டிடும் அடியேன்  விண்ணப்பம்      
அன்யதா  சரணம் நாஸ்தி
துமேவ சரணம் நமஹா
உன் சரணாகதி வேண்டும்
சரணாகதன்  
அடியேன்
சுந்தரராஜ தாஸன்
  9003095640

உழைத்து வாழ்வதே உயர்வு பிறர் உழைப்பில் வாழ்வதே இழிவு


இப்போது உள்ள சூழலில் மக்கள் இலவசங்களாலும் நியாயமற்ற 

சலுகைகளாலும் மூழ்கி மங்கிக் கிடக்கின்றனர்

ஆனால்  நாடு பெரும் பொருளாதார வீழ்ச்சியைக்கண்டுள்ளது மனிதன் 

மற்றும்  உயிரினங்கள்  வாழ்விற்கு தேவையான அத்துனைப் பொருட்களும் 
எட்டாத அளவுக்கு உயர்ந்துள்ள இந்நிலையில்  .

எதையும் யாரும் இலவசமாகவோ குறைந்த விலையிலோ
வழங்குவதேன்பது    கடுகளவும் சாத்தியமில்லை!
 

எந்தத் துறையிலும் ஒருவரும் தன் கடைமையை உணர்வதில்லை!
உண்மையாகவும் நேர்மையாகவும் பொதுமக்கள் நன்மைக்காவும்
உழைக்க ஒருவரும் இல்லை!

சேவை மனப்பான்மையற்ற அதிகாரிகள்
தேச பற்று கொஞ்சமும் இல்லாத தலைவர்கள் ,தொண்டர்கள்
லாப நோக்கை மட்டுமே குறியாகக் கொண்ட வர்த்தகங்கள்
மேலும்  
உணவுப்பொருட்கள்  உற்பத்தி இல்லை
விலை நிலங்கள் பணம் பதவி படைத்தவர்களால்
ஆக்க்ரமிக்கப்படுகிறது!   தாம் செய்யும் தொழிலை

தெய்வமாகக்கருதும்  விவசாயிகளும்  தானும் உண்டு பிறர்க்கும்
கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மாறி 
அவர்களும் தற்போது உள்ள சூழலில் தமக்குத் தேவையான உணவு மட்டும் உற்பத்தி  செய்தால் என்ன?
என்று எண்ணத் தோன்றுகிறது

நடுத்தர வர்க்க மக்கள் நிநைத்துக்கூட பார்க்க முடியாத
அளவு தங்கம் வெள்ளி துணி மணிகள்  போன்ற பொருட்களின்     
விலை வாசி ஏற்றம்!

காரணம் மனிதர்களிடம் உழைப்புத்திறன் மங்கிவிட்டது

தனிப்பட்டவர்கள், குறிப்பிட்டவர்கள் தன் சுயநலத்திற்காக,
சுயலாபத்திற்காக சில வீட்டு தேவைகளை இலவசமாகவும்

குறைந்த விலையிலும் வழங்குவதால் மக்களின் சுறுசுறுப்பின்மை
தூண்டப்படுகிறது உழைப்புத்திறன் மாள்கிறது!


இதனால்  எல்லாத்தேவைகளையும் அடுதவர்களே
வழங்க வேண்டும் என்ற அவல நிலைக்குத்

தள்ளப்படுகிறார்கள். அவர்கள் கை ஏந்தும் நில்லைக்கு
ஆளாகிறார்கள்


இதேபோல் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு
ஊக்கத்தொகை (மறுபடியும் தோல்வி அடையவா அல்லது

இந்தத் தோல்விக்கு சன்மானமா) மேலும் பட்டம் படித்த
வேலை இல்லாத இளைஞ்ர்களுக்கு ஊக்கத்தொகை

இவை எல்லாம்  எதற்கு?   இவர்கள் கொடுக்கும் சிறு தொகை
எதற்குப் பயனளிக்கும்?  அவர்களை ஏன் சோம்பேரியாக்குகிரார்கள் 


எழுச்சிமிகு இளைஞ்ர்களே  சிறுவயது முதலே நம் நாட்டின்

தேசப் பற்று கொண்ட தியாகிகள்  மகாத்மா காந்தி, நேரு மஹா கவி சுப்பிரமணிய  பாரதி வாஞ்சிநாதன் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பலர்  நாடு சுதந்திரம் பெற நாட்டிற்காக சுயநலம் கருதாது உயிர் தியாகம் செய்தவர்கள்!
அப்படிப்பட்ட வீரத் தமிழர்கள் வாழ்ந்த இந்நாட்டில்.


நேர்மையாக உழைக்கும் தன்மையை உயர்த்த வேண்டும்!
உழைத்து ஊதியம் பெறவேண்டும்! கல்வித் தரத்தை

உயர்த்த வேண்டும்! சாதி மத வேறு பாடின்றி நன்றாகப்
பயிலும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்!

சலுகைகள் வழங்கலாம் ஆனால் மதிப்பெண்களில்
பாரபட்ஷம் கூடாது!  தரமான கல்வி  யாரிடதில்

இருந்தாலும் பாராட்ட வேண்டும் அதன்படி
முன்னுரிமை வழங்க வேண்டும் !


இலவசங்களையும் பாரபட்ஷங்களையும் ஒதுக்க வேண்டும்
தீய சக்திகளுக்கு இடம் கொடேல், கொலை கொள்ளை

தேசத்துரோகச்சயல்களை வேரோடு அழிப்போம்

வளமான !தரமான ! நிலையான! நியாமான! மகிழ்வான

நாடாக இந்தியாவை மாற்றுவோம் மகிழ்வோடு வாழ்வோம்

நாடுயர வீடுயரும் பின் நாமும் உயர்வோம்


பாரத தேச விஸ்வாசி
சுந்தரராஜன்

Friday, October 29, 2010

வாழ்க தமிழ்

வாழ்க தமிழ்

இன்றைய நிலையில் தமிழை தமிழாக பேசுபவர்

மிக மிகக் குறைவு. பெரும்பாலும் சில
தொலைக்காட்சிகளில் செய்திகள் வாசிப்பவர்கள்
வர்ணனையாளர்கள் மற்றும் சில பிரபலங்கள்
இவர்களில் சிலர்  தமிழ் நாட்டிலே பிறந்து
வளர்ந்தவர்களும் கூட !

இவர்கள் பேசும் இன்பத்தமிழைப்பாருங்கள்

 

சரியான தமிழ்                     தவறாக பேசுவது

தமிழ்       ---------------------             தமில்

வணக்கம்  -----------------              வனக்கம்
உங்கள்/எங்கள்  ----------------       உங்கல்/எங்கல்
கண்ணன்  ------------------------        கன்னன்
நாளை காலை ------------------     நாலை காளை
பற்றாக்குறைக்கு சமஸ்க்ருதம் மற்றும் ஆங்கில கொலை
விஷ்ணு   ----------------------------    விஸ்ணு
உஷா         ------------------------       உஸ

இன்ஸ்பிரேஷன்   ------------------இன்ஸ்பிரேசன் 
எக்ஸ்ப்ரஷன் ------------------------எக்ஸ்ப்ரசன்

எப்படி பேசியும் பலர் பிரபல மாகிவிடுகிறார்கள்

அதை கேட்டு கையையும் தட்டுகிறார்கள்   

இப்படிக்கு தமிழ் ஆர்வலன்
சுந்தரராஜன்