இது சாத்தியமா ::::::::
மார்ச் 08 :: அன்றைய தினம் செய்தியில் எந்த கடையிலும் ரேஷன் பொருட்கள் வாங்கலாம் என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
தமிழ் நாட்டைப்பொறுத்தவரையில் அந்தந்த கடையின் கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களே குறித்த நேரத்தில் தேவையான அளவு உணவு பொருட்கள் வருவதில்லை என்று கடை ஊழியர்கள் புலம்புகிறார்கள்.அதேபோல் வாடிக்கையாளர்களும் தேவையான பொருட்கள் உரித்த நேரத்தில் சரியாக கிடைப்பதில்லை என்று கூறுகிறார்கள் .
இந்த நிலையில் வேறு கடையின் கார்டுதாரர்களுக்கு மற்ற கடையில்
அவர்கள் வாங்குவதற்கான பொருட்கள் வைப்பு இருக்க வாய்ப்பு இல்லை.
அப்படியென்றால் எந்த விகிதத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் சிவில் சப்ளை நிறுவனத்திலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வார்கள்:::
இதனால் கடை ஊழியர்களும் குழம்புவார்கள் நுகர்வோர்களுக்கும்
இந்த நடைமுறை பயனளிக்காது.
எனவே இந்த நடைமுறை சாத்தியமாகும் என்று தோன்றவில்லை..
மேலும் இதனால் சில தவறுகள் நடக்கவும் வாய்ப்புள்ளது
எனவே இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்தால் நல்லது.
S.S.சுந்தரராஜன்