Tuesday, March 24, 2015

ஹாங்காங்கில் தமிழ் மொழி பயிற்சி

      ஹாங்காங்கில்   தமிழ் மொழி  பயிற்சி தொடங்குவதாக படித்தேன்.                                                                               --------
சென்ற ஞாயிறு ஒரு செய்தித்தாளில் (22/03 /15)-வெளிநாட்டு செய்தியில் -ஹாங்காங் என்ற நாட்டில்
 தமிழ் மொழி  பயிற்சி தொடங்குவதாக படித்தேன். அங்கு நமது தாய்மொழி தமிழை கற்றுத்தர 25க்கும் மேற்ப்பட்ட பெண்கள்  ஆர்வம் காட்டி வருகின்றனர் அதற்கான முயற்ச்சிகள் செய்து வருவது பாராட்டுக்குரியது.இந்த முயற்சி தமிழர்களாகிய நாம் வசிக்கும் த மிழ் நாட்டிற்கு மிக மிக அவசியம் தேவைப்படுகிறது .
முக்கியமாக பள்ளி, கல்லூரி மாணவர்களு க்கும் மற்றும் மீடியாக்களில் தமிழ் பேசுபவர்களுக்கும்
தமிழை தமிழாக உச்சரிக்க மிகவும் முக்கியமாக தேவைப்படுகிறது.

மேலும்  பல தமிழர்களுக்கு சரியான தமிழ் உச்சரிப்பு தெரியவே இல்லை.

எனவே இந்த சேவையை உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் ஆர்வலர்கள் தங்கள் மீடியாக்கள் செய்த்தித்தாள்கள்  மூலமும் சம்மந்த்தப்பட்டவர்களை அணுகி தமிழ் நாட்டில் பல தமிழ் பயிற்ச்சி மையங்களை  தொடங்கி எல்லோரும்
 சரியான தமிழ் உச்சரிப்பை பயன்படுத்த தமிழை காப்பாற்ற, தமிழ் வளர தேவையான முயற்சிகளை  எடுத்து தமிழகமெங்கும்/உலகமெங்கும் உள்ள அனைவரும் தமிழ் தெளிவாகவும் சரியான உச்சிரிப்போடும் 
பேச ஆவன நடவடிக்கை எடுக்க உதவுமாறு கேட்டுகொள்கிறேன்.

வாழ்க தமிழ்

இப்படிக்கு  தமிழ் ஆர்வலன் சுந்தரராஜன்
காந்து , இதை ஃபேஸ்-புக்கில் போடலாம் என்று நினைக்கிறேன்....கிரேசி மோகன்
இந்த மூவருடன் கிட்டத்தட்ட 35 வருட தாம்பத்யம் என்றே சொல்லலாம்....கிரேசி குழுவின் வெற்றிக்குக் காரணம் என் எழுத்தோ இல்லை மாது பாலாஜியின் நடிப்போ இல்லை என்று எரியும் கற்பூரத்தை முழுங்கி சத்தியம் செய்வேன்....அப்பா ரமேஷ், சுந்தாக்ஸ் எனப்படும் சுந்தரராஜன், பார்த்தி எனப்படும் பார்த்திபனின் குழு விஸ்வாசமே....இன்னும் ARS, சத்யமூர்த்தி, மேக்கப் நடராஜன் என்று 25 பேர்கள் உள்ளனர்....எனது மாற்றுக் குடும்பம் என்று மார்தட்டிச் சொல்வேன்....எனக்கு விழுந்த அட்ஷதையில் மஞ்சள் பூசி மங்களமாக்கியவர்கள் இவர்கள்தான்....தனிமரம் தோப்பாகாது....இந்தக் கிரேசி தனிமரத்தை தோப்பாக்கியவர்கள் இவர்கள்தான்....எங்கள் குழுவில் யார் சேர்ந்தாலும் நாங்கள் அவர்களுக்கு பிரம்மோபதேசம் செய்து, நட்பு- பூணலை போட்டுவிட்டு, ஒற்றுமை காயத்திரியை உபதேசிப்போம்....இந்த மூவரில் இருவர் பிரபல மைலாப்பூர் அகாடமியின் விருது வாங்கப் போகிறார்கள்(சுந்தாக்ஸ் பாட்டி வேடத்திற்கும், பார்த்தி சாக்லேட் கிருஷ்ணா கம்பனியின் ஜெனரல்-மானேஜராக நடித்து ‘’சாக்லேட் கிருஷ்ணாவை’’ 700 ஷோ நெருங்க வைத்தற்கு....அப்பா ரமேஷ் ‘’தெனாலி ராகவன்’’ என்ற நாடகத்தை வேறொரு குழுவுக்கு இயக்கியதற்கும்)....மாது பாலாஜி யோசனைப்படி கெளரவித்தோம் பட்டு சால்வை போர்த்தி....
இவர்கள் மூவரைப் பற்றி அடியேன் முன்பு எழுதிய வெண்பாக்களை பகிர்ந்து கொள்கிறேன்....இவைகளை கம்பன் வீட்டு பட்டுத் தறியாக ஏற்று கொள்வார்கள் என்ரு நம்புகிறேன்....
SUNDAX பாட்டி வேஷம் பற்றி
-------------------------------------------------
பாட்டியின் வேடத்தைப், பாங்குற செய்தவன்,
போட்டியிட்டான்  மாதுபா லாஜியுடன், -கூட்டுவான்,
எந்தரோல் தந்தாலும் ஏற்றம் அளிப்பது,
சுந்தர ராஜன் சிறப்பு....
அப்பா ரமேஷ் பற்றி
---------------------------------
முப்பதாம் ஆண்டும் முழுமூச்சாய் நாடகத்தை,
தப்பாது ஆண்ட தலைவரே, -அப்பா,
ரமேஷாஉந்தன், ரெகுலா ரிடியின்,
இமேஜுக்(கு) எவரெஸ்டே ஈடு....
நண்பன் பார்த்திக்கு எழுதியது....  
-------------------------------------------------------
பார்த்தி எனச்சொல்ல, பாய்ந்தோடி நம்கடனை,
நேர்த்தி யுடன்முடிக்கும், நண்பனவன், -கீர்த்தியில்,
காண்டீபன், சொல்லில் கவுரவன், சோதர,
பாண்டவ அர்ஜுனன் பார்....கிரேசி மோகன்..