குடிநீர் மற்றும் வடிகால் வாரியம்
சென்னை மாநகரம்
இந்த துறை சார்ந்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
நங்கநல்லூரில் TNGO Colony முதல் தெருவில் கிட்டத ட்ட 30-40 வீடுகள் உள்ளன.
கடந்த 15-20 நாட்களாக தெருவின் தொடக்கம் முதல் கடைசி வரை மழை நீர் கால்வாய் தோண்டப்பட்டு வருகிறது. வீட்டு நுழை வாயிலை ஒட்டியவாறு 3 அடி நீளம் 4 அடி ஆழம் தோண்டி உள்ளது . நாங்கள் வெளியே செல்லவும் வாகனங்களை எடுக்கவும் பாதுகாப்பாக எந்த ஏற்பாடும் செய்யவில்லை. ஒரு மாதிரி நாங்களே எகிறி குத்திச்சு ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு சமாளித்து வருகிறோம். தெருவாசிகள் அனைவரும் இந்த பணிபுரிபவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பும் உதவியும் செய்து வருகிறோம்.
அனால் பள்ளிக்குச்செல்லும் குழந்தைகள் அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் மற்றும் முதியவர்கள் அனைவரும் வெளியே வர சங்கடப்படுகின்றனர். .
மேலும் குடி நீர் இணைப்பு மற்றும் கழிவு நீர் இணைப்புகள் உடைக்கப்பட்டு அவைகளை சரியாக தரமாக மூடாமல் மன்னைத்தூவி சிமென்ட் பலகையால் மூடி விடுகின்றனர்.
கடந்த 15 நாட்களாக சரி வர குடிநீர் வருவதில்லை. கேட்டால் அவர்களிடமிருந்து சரியான முறையான பதில் இல்லை.
குடிநீர் வாரியமும் பள்ளம் தொண்டியுள்ளதால் லாரி வருவதில்லை ரோடுக்குச்சென்றும் தண்ணீர் கிடைக்க வழி இல்லை. பூமி தண்ணீரும்
தேவையான அளவிற்கு கிடைப்பதில்லை.
எங்கள் தண்ணீர் இணைப்புகள் சரியாக இணைக்கப்பட்டு குடிநீர் சீராக வரவேண்டும் சாலையை சீர்படுத்தி சுலபமாக நடமாட வழி செய்ய வேண்டும்.
இதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட துறையை அணுகி துரிதபடுத்தும்
பணியை தினமலர் பத்திரிகை மூலம் செயல் படுத்த முடியும் என நம்புகிறோம் .
அன்புடன்
சுந்தரராஜன்
நங்கநல்லூர் TNGO Colony பகுதிவாசி
No.19,Ist Street, Nanganallur
சென்னை