Wednesday, March 29, 2023

https://youtu.be/KmhKax7zY8k

Killing Statue

 

கொலை செய்யும் சிலைகள்

எனது விமர்சனம்

திரு பாம்பே சாணக்கியா 1971 எழுதிய  "KILLING STATUE "
"கொலை செய்யும் சிலைகள்":கிட்டதட்ட அந்த காலத்து மார்டன் தியேட்டர்ஸ் படங்கள் சாயல் என்று சொல்லலாம்::  1981 தமிழாக்கம் செய்து 47 வருடங்களாகவெற்றிகரமாக  மேடையேறிய நாடகம்:: 
சிவபிரகாசம் என்பவர் நடத்தும் மியூசியத்தில் பல கொலையாளிகள், தற்கொலையாளர்கள் சிலைகள் உள்ளன: ஒரு TV  பேட்டியில் தன் மியூசியத்தில் உள்ள சிலைகள் பார்க்க மிகவும் பயங்கரமாகவும் தத்ரூபமாகவும் இருக்கும் அங்கு இரவில் 9 மணிக்குமேல் யாரும் வரமாட்டார்கள் அப்படி யாரேனும் வந்து தங்கினாலும் உயிருக்கு உத்திரவாதமில்லை என்று அடித்துக்கூறுகிறார்::பிறகு அந்த tv  ஸ்டேஷனுக்கு சென்ற பூர்வீகா Journalist  அந்த மியூசியத்தின் விவரங்களை சேகரித்துக்கொண்டு உரிமையாளர் சிவப்பிரகாசத்தை சந்தித்து தனது வாழ்கையின் லட்ஷியம் துனிச்சலாக, சவாலாக இருக்க வேண்டும் எனவும், தான் வரும் ஞாயிறு 9-30 க்கு வந்து இரவு முழுவதும் மியூசியத்தில் தனியாக சிலைகளோடு இருப்பதாக சபதமேற்கிறார்::சிவபிரகாசம் மியூசியத்திற்கு வந்த பூர்வீகாவிற்கு இருட்டறையில் உள்ள எல்லா சிலைகளைப்பற்றியும் விவரிக்கிறார்:: உதவிக்கு ஒரு ஆளை அனுப்பிய பின் அவர் சென்று விடுகிறார்::இரவு 8 மணி , 10 மணி இப்படி நேரம் ஆக ஆக, உதவியாளர் காபி , தண்ணிர் வேண்டுமா என தொந்தரவு செய்ய , ஒன்றும் வேண்டாம் என்று கோபமாக விரட்டிவிடுகிறார்:: பின் சற்று உறங்கியவர் திடீரேன்று எழந்து சிலைகள் எல்லாவற்றையும் உற்று நோக்க: ஒரு சிலைமட்டும் ஆடுவதைப்பார்த்து அதிர்ச்சியாகி you நீதான் என்று சொல்ல அந்த சிலை சிரித்துக்கொண்டே அவளை நோக்கி வருகிறது :  தான் ஒரு Psychiatric என்பெயர் Dr. KKhaber Khan ஒரு கொலை கேஸில் போலிஸிடமிருந்து தப்பி வந்து இந்த சிலையோடு நின்றுவிட்டேன்:  நீ போய் உன் இடத்தில் உட்கார் எனது பொழுது போக்கு  I will collect throat எனக்கு உன் தொண்டை வேணும், என்றான் அவள் நடுக்கத்தோடு  எவ்வளவோ கெஞ்சியும் தன் கையில் இருக்கும்  Barber கத்தியால் அறுத்து கொன்றுவிடுகிறான்  அலரல் சத்தம் ~~~light off ~~~ light on :: அதிர்ச்சியாக சிவபிரகாசம், வேலைக்காரன்::டாக்டரைஅழைத்து பார்த்ததில் கனவில் வந்த அதிர்ச்சியில் இறந்ததாக கூறுகிறார்::கடைசியில் டாக்டரே அந்த சிலைஅசைவது போல் சந்தேகமடைகிறார்: வேலைக்காரன் சிலையைநன்றாக அசைக்க, வெறும் சிலையென உனர்கிறார் :: சிவபிரகாசம் சிலை எப்படி அசையும், சார்:: ஆனா மிகவும் துணிச்சான பெண் ,சிறிய வயது: எப்படி இறந்தார் என வருத்தப்பட,  டாக்டர் post mattam result வந்தால் தெளிவாகிவிடும் என்று முடிக்கிறார்::::

குறிப்பு::சிவபிரகாசம் மியூசியத்தில் பூர்வீகா சென்றது முதல் மறுநாள் காலை வரை திகில் நிறைந்த அறைபோல் மேடை அமைப்பு, ஒலி, ஒளி அற்புதம்: அனைவரின் நடிப்பும் மிக யதார்த்தம்  தங்களின் சற்றே வித்தியாச மான அற்புதமான படைப்பு :: பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் பாம்பே சாணக்கியா/ அன்பன் பாட்டி சுந்தரராஜன்::








நெருடும் உரவுகள்




பாம்பே சானக்கியா எழுதி இயக்கிய "நெருடும் உரவுகள்" 

விமர்சனம்::

பவானி, சங்கர் தம்பதியர் குடும்பம், அப்பா, கிச்சா அண்ணா,  மன்னி மற்றும் கண்ணன் (புல்லாங்குழல் இசைக்கலைஞர்) இப்படி குடும்பம் கலகலப்பாக போய்க்கோண்டுருக்கையில்:: வக்கீலான சங்கருக்கு திருமணத்திற்கு முன் தனது மனைவி கல்கத்தாவில் இருந்தபோது, பவானியை கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஒருதலைக்காதலை யாரோ சொல்ல அதை நம்பிய, சங்கர், பவானி அந்நோன்ய வாழ்க்கையில் மனஸ்தாபம், விரிசல் ஏற்பட::அவள் அவன் மீது கொண்ட அன்பையும், தான் நிரபராதி என்று எடுத்துரைத்தும் அவளை வீட்டை விட்டு வெளியேரச்செய்கிறான்:: வக்கீலென்பதால் உடனே விவாகரத்துக்கும் ஏற்பாடு செய்கிறான்: இன்நிலையில் திடீரென்று கிச்சா அண்ணா மாயமாகிறார்::10 நாள் கெடு முடிந்து பவானி வீட்டைவிட்டு வெளியேறும் தருவாயில் காணாமல் போன கிச்சா அண்ணா வந்து கிருஷ்ணமூர்த்தி என்பவன் பவானியை விரும்பியுள்ளான் அதை நண்பர்களிடம் சொல்ல, அதை பெறுசாக்கி ஊதிவிட்டார்கள்: பவானிக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெளிவு படுத்துகிறார்::அதன் சங்கர் மனம் திருந்தி பவானியை அன்போடு ஏற்றுக்கொள்கிறார்::விவாகரத்தை வாபஸ் பெறுகிறார்:ஒவ்வோரு எபிஸோடும் மிக விருவிருப்பாக நகருகிறது: அற்புதமான குடும்ப நாடகம், அனைவரது நடிப்பும் அற்புதம்: இயக்கம் இயக்குனர் திலகத்திற்கே திலகமான சாணக்கியா:பாராட்டுக்கள்:::👑👑அன்பன் பாட்டி சுந்தரராஜன்👏