Thursday, September 12, 2019

பொறுமையே பெருமை தரும்  பொறாமை
வீழ்ச்சி தரும்,என்பதுபெரியோர்கள்  கூற்று .

நான் என்ற அகந்தை அழிவின் அறிகுறி
தன்னைப்போல் பிறரும் என்பது அனுபவத்தின் அடையாளம்.
தனக்கு நிகர் தானே என்று நினைப்பது அறியாமை
உயர்வு தாழ்வு என்ற எண்ணம்  உதவாதது.
அனைவரையும் சமமாக பாவிப்பது உயர்ந்த சிந்தனை
இவை அனைத்தையும் கடைபிடித்தால்
மட்டுமே மகிழ்ச்சி மற்றும் வெற்றி நிச்சயம்!!!!!

அன்பன் சுந்தரராஜன்

Monday, July 15, 2019

கவியாலும், கதையாலும் ,ஓவியக்கலையாலும்,வெண்பாவின் வேந்தனாகவும்,நடிப்பின் நகைச்சுவை நாயகனாகவும்,அனைவருக்கும் நல்ல நண்பனாகவும்,நல்ல மனித நேயனாகாவும்,நாநிலம் போற்றும் சிறந்த பேச்சாலனாகவும்,உலகம் போற்றும் புகழின் உறிமையாளனாகவும் எங்கள் அனைவரின் அன்புக்கும் சொந்தக்காரனான கிரேஸி மோகனே :: உன் பூத உடல்தான் உலகை விட்டு மறைந்தது:: உனது நகைச்சுவை ஆத்மா மறையவில்லை ,அனைவரது உள்ளத்திலும் உயிரிலும் கலந்தது, அவை உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்:: வாழ்க நகைச்சுவை:: வளர்க கிரேஸி மோகன் புகழ்/ அன்புடன் நண்பன் சுந்தரராஜன்💐