மோடியின் நேர்மையான அணுகுமுறையைப்
பார்த்து மற்ற கட்சிகள் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும்
அவரின் பதவி ஏற்ப்பு விழாவிற்கு சார்க் நாடுகளையும் மற்றும் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான் இலங்கை போன்ற நாடுகளின் அதிபர்களை அழைத்தது . அனைத்து உலக நாடுகளும் பிரமுகர்களும் பிரமி க்க வைத்தது.
இதன் முலம் ஒரே கல்லில் 2 மாங்காய் என்பது போல பாகிஸ்தான் மற்றும் இலங்கை சிறையில் அடைக்கபட்டிருந்த தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வைத்தார்.மீனர்வகளுக்காக போலி கோஷம் போடும் கூட்டத்தை வாயடைக்க வைத்தார்.நீண்டகால பிரச்னைக்கு ஒரு அழைப்பின் மூலம் முடிவு கட்டினார். .
இவரது தொடக்கமே ஒரு சாதனையி தொடங்கியது. இவரது ராஜ தந்திரத்தை அனைவருக்கும் புரிய வைத்தார்.
பொதுவாக எல்லா அரசியல் கட்சிகளும் தேசிய கட்சியாக இருந்தாலும் மாநில கட்சியாக இருந்தாலும் தான் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தவுடன் நாட்டின் முன்னேற்றதிற்கான மற்றும் வளர்ச்சிக்கான பணிகளை தொடங்காமல். முந்தைய ஆட்சியாளர்களிடம் பகைமையை மனதில் கொண்டு ஒவ்வொரு அ மைச்சர்களையும் ஏதாவது பழி சுமத்தி அவர்களை சிறையில் அடைப்பது, ஊழல் வழக்குகளில் ரெய்டு என்ற பெயரில் உள்ளே தள்ளுவது,. அவர்கள் கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் பெயர் மாற்றுவது அல்லது அதை முடக்குவது போன்ற செயல்பாடுகளை மாநில மற்றும் மதிய அரசுகள் முதல் வேலையாக தொடங்கும்.
இன்று (31/05/2014) தினமலர் பத்திரிகையில் மோடியின் வளர்ச்சிப் பணிகள் பற்றி படித்ததும் அவரின் நடவடிக்கைகள் போற்றத்தக்கது என்பதை உணர முடிந்தது
அதாவது முந்தய ஆட்சி கொண்டு வந்த எந்த திட்டத்தையும் அவர் பெயர் மாற்றவில்லை எதையும் முடக்கவும் இல்லை.மேலும் முக்கியமாக ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் 100 நாள் செய்யல் திட்டம் உருவாக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்தது இன்னும் பல..
மோடியின் அரசு இந்தியாவை அதி சீக்கிரத்தில் ஒரு வல்லரசாக மாற்றும் என்பதில் ஐயமில்லை.
மோடியின் அரசுக்கு ஒரு "ஜே" போடுவோம்.
பொறுத்திருந்து பாப்போம்.
தேசிய பற்றுள்ள இந்திய பிரஜை
சுந்தரராஜன் .