தமிழ் நாட்டில் ஐந்து வருட இடைவெளிக்குப்பிறகு
புரட்சி தலைவி ஜெயலலிதாவின் தலைமையில்
அமைந்ததில் அனைத்து சாராருக்கும் மகிழ்ச்சியே
ஜெயலலிதாவின் தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களும்
அவரது துரித நடவடிக்கைகளும் எப்பொழுதும்போல்
அவரது சிறப்பாற்றலை பிரதிபலிக்கிறது.
ஆனால் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்
ஆ தி மு கவின் அமோக வெற்றி அனைத்து தரப்பினரும்
எதிர் பார்த்ததே! முக்கிய காரணம் முன்னாள் தி மு கே ஆட்சியின்
உலக மகா ஊழல் ,அராஜகப்போக்கு, குடும்ப சுயநலம் மற்றும்
சமுதாய சீர்கேடுகள் என்று அடிக்கிக்கொண்டே போகலாம்.
மேலும் இலவசம் என்பதே மறைமுக லஞ்சம் கொடுத்து ஓட்டு வாங்குவது. அப்படியே கொடுத்தாலும் தேர்தல் நேரத்தில் கொடுக்கும்
இலவசங்கள் வாழ்க்கை நடத்தவும் குடும்ப நலத்திற்கும் எவ்வளவு
நாட்கள் கை கொடுக்கும். வாழ்க்கைக்கு தேவையான மற்ற ஜீவாதாரங்களை எங்கு/எப்படி பெறுவார்கள். தவிர நம் வரிப்பணத்தை நமக்கே தானமாகக்கொடுத்து ஓட்டை பறிக்கின்றனர்
அடுத்தவர்களை சார்ந்தும் கை ஏந்தி நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்படும் . மாறாக இலவசங்களை தவிர்த்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல எல்லாத்துறைகளிலும் உற்பத்தி திறனை பெருக்கி வேலை வாய்ப்பை உருவாக்கி அனைவரும் உழைத்து பொருள் பணம் ஈட்ட வகை செய்தால் இலவசங்களை யாரும் வாங்காத நிலை உருவாக்கலாமே? அதுதானே அரசின் கடமை, சாதனை, பெருமை.
ஜெயலலிதாவின் அறிவுப்பூர்வமான சிந்தனை பாராட்டுக்குரிய ஆளும் திறன் சிறப்பான செயல் பாடுகள் தமிழக மக்களின் முழு ஆதரவு இதனை இருந்தும்
இவர் ஏன் இலவச திட்டங்களை முன் வைக்கிறார்? இது இவரது மாட்சிமைக்கு உகந்தது அல்ல என்பது இவர்கள் ஆதரவாளர்கள் கருத்து
மற்றபடி இவர் செயல் பாடுகள் அனைத்தும் போற்றக்ககூடியதே
இவரே நிரந்தர முதல்வராக நிலைக்கக்கூடிய தகுதியும் திறமையும் உள்ளவர் என்பதில் ஐயமில்லை!
சுந்தரராஜன்
க்ரோம்பேட்